பூட்டி இருக்கும் வீட்டை குறி வைத்து கொள்ளையடிக்கும் பலே திருடன்! சிக்கியது எப்படி?
37 வழக்குகள் பதியப்பட்ட திருடன் தர்மபுரியில் கைது செய்த காவல்துறை
தர்மபுரி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பணம் நகை போன்ற பொருட்கள் களவு போனது. இதைத்தொடர்ந்து களவு போனவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். இதை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது
தருமபுரி பகுதியில் பல்வேறு இடங்களில் வீடுகளில் நுழைந்து கொள்ளையடித்தும், இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளைக்காரனை காவல்துறையினர் கைது செய்து ஐந்தரை பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் பணம் 25 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
ஆளில்லா வீட்டை ஸ்கெட்ச் போட்டு திருடன் திருடன்
தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையம், பாரதிபுரம்,பிடமனேரி, சோகத்தூர், சவுளுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை அடிப்பதும்,வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது.
சிசிடிவி சிக்கிய திருடன்
இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தருமபுரி பிடமனேரி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த ஒவ்வொருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அவர் காவல்துறையினர் கேட்கும் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருடன் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது
இந்த விசாரணையில் குடியாத்தம் பகுதியைச் சார்ந்த யுவராஜ் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஆய்வு செய்த போது யுவராஜ் என்பது காவல் துறையினருக்கு உறுதியாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் யுவராஜ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு சென்று பூட்டிய வீடுகளை உடைத்து பணம், நகை, கொள்ளை அடிப்பது இருசக்கர வாகனங்கள் திருடி செல்வதும் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து யுவராஜ் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஐந்து சவரன் தங்க நகையும் இருசக்கர வாகனம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கொல்லையில் ஈடுபட்டு வந்த யுவராஜ் என தெரியவந்தது மேலும் இவர் மீது தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளும் மற்றும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இதேபோல் வேலூர் மாவட்டத்தில் நிறைய திருட்டு வழக்குகளில் யுவராஜ் கைதாகி உள்ளார். பூட்டி இருக்கும் வீடுகளை கண்டறிந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று இது போன்ற செயலில் இவர் ஈடுபட்டு வருகிறார் இவர் மீது வேலூர் மாவட்டத்திலும் 30 திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.