மேலும் அறிய
Advertisement
தேர்தல் வரும்போது மட்டும் தமிழகத்தின் மீது திடீர் பாசம் பிரதமருக்கு வருகிறது - முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் 350.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 993 பணிகளை திறந்து வைத்தார். அதேபோன்று 114.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 75 பணிகளுக்க அடிக்கல் நாட்டினார். மூன்று மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு 95.54 கோடி மதிப்பில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், ”தருமபுரி என்றால் என் நினைவுக்கு வருவது ஒகேனக்கல். தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன். தமிழகத்தில் முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் தருமபுரி மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. தற்போது மகளிர் சுய உதவி குழுக்கள் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திட்டம் பெண்களுக்கு திமுக அரசு வழங்கிய மிகப்பெரிய அதிகார கொடை. தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் திமுக போல் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா. திமுக அரசு போல மக்கள் நல திட்டங்களின் சாதனைப்பட்டியலை அதிமுகவினரால் வெளியிட முடியுமா. திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியது தான் அதிமுகவின் சாதனை. வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்து இருக்க முடியாது. எந்த ஆட்சியில் இந்தக் கொடுமை நடைபெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களையும் சமமாக நினைத்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு எல்லா மாநிலங்களையும் சமாமாக நினைகிறதா? எல்லா மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் வேலையை விட்டுவிட்டு அழிக்கப் பார்கிறது மத்திய பாஜக அரசு.
மாநிலத்துக்கு தேவையான நிதியை வழங்க மறுக்கிறது மத்திய பாஜக அரசு. நிதி என்பது மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் போன்றது அதை நிறுத்துகிறது பாஜக அரசு. 10 ஆண்டுகளாக மத்திய அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை 500 ரூபாய் உயர்த்தி விட்டு தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு 100 ரூபாய் குறைத்திருப்பது மோசடியான செயலாகும். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மாநில அரசுகளின் பங்கு களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு தனது பெயரில் ஸ்டிக்கரை ஒட்டி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தை வெற்றுப்பயணமாக மக்கள் பார்க்கிறார்கள். தேர்தல் வரும்போது மட்டும் தமிழகத்தின் மீது திடீர் பாசம் பிரதமருக்கு வருகிறது. ஆனால் தமிழக அரசு உங்களோடு இருக்கிறது. நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். மக்களும் அரசும் குடும்பங்களாக இணைந்து செயலாற்றி வருகிறது” என்று பேசினார்.
இவ்விழாவில் மாநில அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அர.சக்கரபாணி, ஏ.வ. வேலு, மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion