(Source: ECI/ABP News/ABP Majha)
தாசில்தார், சீல், அரசு கோபுர சீல் போலி பத்திரம் ஆகியவற்றை செய்த ஐந்து பேர் கைது.
தாசில்தார், சீல், அரசு கோபுர சீல் போலியாக பத்திரம் செய்த ஐந்து பேர் கைது.
பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சீல், அரசு முத்திரை போலியாக தயாரித்து, போலி கையெழுத்திட்டு மோசடி செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளபட்டியை சேர்ந்த விவசாயி கோபால், 86, இருளப்பட்டியில் உள்ள தனது, மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை தனது மகன் ராமஜெயம்,54. பெயரில் கிரையம் செய்ய கடந்த மாதம், 26 ல் பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய சென்றுள்ளார்.
அப்போது, அனுபவ சான்றை பார்த்த சார் பதிவாளர் சரவணன், சந்தேகம் அடைந்து உண்மை தன்மை அறிய பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த அனுபவ சான்றிதழ் போலியானது. அதில் போடப்பட்ட இருக்கும் தாசில்தார் கையெழுத்து போலியானது என தெரிய வந்தது.
இதையடுத்து , தாசில்தார் சரவணன் ஏ. பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 17 ல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கோபாலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோபால் மற்றும் அவரது மகன் ராமஜெயத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தனது தந்தை கோபால், தங்களது மூன்று ஏக்கர் நிலத்தை எனது பெயரில் கிரையம் செய்ய
பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள குண்டல்மடுவு பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் சந்திரன்,36; என்பவரை அணுகினர்.
அவர் தாசில்தாரிடம் ,அனுபவ சான்றிதழ் வாங்க வேண்டும். அதை நானே வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி , அதற்காக, ஒரு லட்சத்து 85,000 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின் மெனசியைச் சேர்ந்த அருள்,43; அதே பகுதியை சேர்ந்த, அரூர் தாலுகா அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த சந்திரசேகர், 42; ஆகிய மூவரும் சேர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாரின் போலி சீல் மற்றும் போலி அரசு முத்திரை தயாரித்து உள்ளனர்.
அதன் மூலம் தாசில்தார் சரவணன் கையெழுத்தை போலியாக போட்டு, அனுபவ சான்றிதழ் வழங்கி பத்திரப் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டியில் பதிவு செய்ய முற்பட்ட போது, மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது என்று கூறியதையடுத்து, அ.பள்ளிப்பட்டி போலீசார் , கோபால்,86; அவரது மகன் ராமஜெயம்,54; அருள்,43; சந்திரசேகர் ,42; ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சந்திரனை அ.பள்ளிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பத்திரப் பதிவு அலுவலகத்தில், கிரையம் செய்ய, தாசில்தார், சீல், அரசு கோபுர சீல் உள்ளிட்டவைகளை போலியாக தயாரித்து, தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.