அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
எந்திரம் ஆக்கப்பட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் பதற்றமும், பரபரப்பும் மனிதர்களை தொட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு கட்டத்தில் மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.
இந்த மன அழுத்தம் என்பது வேலைப்பளு, கவலைகள், உறவு சிக்கல்கள் மற்றும் உடல் நல பிரச்சனைகளால் ஏற்படுகிறது. மன அழுத்தம் என்பது வெளிப்புறம் அல்லது உட்புறம் தேவைக்கான உடலில் எதிர்வினையாகும்.
மன அழுத்தம்:
இந்த மன அழுத்தம் என்பது சமீப காலமாக தொழில் சார்ந்த வேலைப்பலுவாள் அதிக அளவில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. தொழில் சார்ந்த மன அழுத்தம் என்பது உலகம் முழுவதும் உள்ளது. சர்வதேச அளவில் 65 சதவீத தொழிலாளர்கள் மன அழுத்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். சில நாடுகளில் இது போன்ற பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
தொழில்சார் மன அழுத்தம்:
இந்தியர்களை பொறுத்தவரை 49 சதவீதம் பேர் மன அழுத்த பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார்ந்த மன அழுத்த பாதிப்புகள் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அவர்களது செயல் திறனில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றனர். என்றும் அதில் தெரிவித்துள்ளது மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு இயல்பாக நிகழும் ஒன்றுதான். மனிதர்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாகும் சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் ஏதாவது ஒரு சூழலில் நிகழ்கிறது.
இதற்கு சுற்றுப்புறமும், உடல் நிலையும் வேலைப்பளு என்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. இதில் தொழில் சார்ந்த மன அழுத்தம் என்பது ஒருவரின் வேலை தொடர்பான உளவியல் அழுத்தமாகும். இது ஒரு நாள்பட்ட நிலையை குறிக்கிறது. வேலையில் உள்ள மன அழுத்தம் சூழல்கள் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
உழைக்கும் மக்கள் வாழும் நாடு இந்தியா:
அந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் சார்ந்த மன அழுத்தத்தை போக்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து மனநலம் சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது:-
இந்தியாவை பொறுத்தவரை உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது. இந்தியா மக்கள் தொகையில் 65 கோடி பேர் 20 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் தங்களின் கல்வி வயது உடல் தகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு தொழில் ஈடுபடுவர்களாக உள்ளனர்.
வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் கிடைக்கும் வேலைகளை செய்து உழைப்பவர் இங்கு கணிசமாக உள்ளனர். இது போன்றவர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் தொழில் சார்ந்த மன அழுத்தம். இது பல்வேறு வழிகளில் வெளிப்பட்டு மனிதர்களை வெகுவாக பாதிக்கிறது.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அதிகப்படியான வேலைகளை சுமக்க வேண்டிய சூழல் அல்லது நிர்பந்தம் என்பது இதில் பிரதானமாக உள்ளது. இது தொழிலாளி தொடங்கி உயர் அதிகாரி வரை உள்ளது.
காரணங்கள்:
இது போன்ற சூழலில் தான் அதிக அளவில் மன அழுத்தம் தற்போது மனிதர்களை பாதிக்கிறது. அதிக எடையை தூக்குவது, நீண்ட தூரம் நின்று கொண்டே இருப்பது, கடுமையான சுற்றுச்சூழல், உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்மை போன்றவற்றையும் அதிக அளவில் தொழில் சார்ந்த மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக அதிகளவிலான அறிவாற்றல் ஈடுபாடு நிலையான முடிவெடுத்தல் சிக்கலை தீர்ப்பது போன்ற பணிகளும் பெரும் அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
மன ரீதியான பாதிப்பு:
மொத்தத்தில் எந்த வேலையும் இருந்தாலும் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தொழில் சார்ந்த உழைப்பையும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் அவசியமாக உள்ளது. இதில் உழைப்பு என்பது உடலும் மனமும் இணைந்து செய்யும் ஒன்றாகும்.
இந்த இரண்டில் ஒன்று வேறுபட்டாலும் ஒருவரின் செயல் திறன் மாறிவிடும். தொழில் சார்ந்த மன அழுத்தம் என்பது அலுவலக கடமைகள் பணிச்சூழல் மற்றும் பலதரப்பட்ட வேலைகள் காரணமாக ஏற்படுகிறது.இது உளவியல் ரீதியாக உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்து பாதிப்பவர்களுக்கு வழி வகுத்து விடும். எனவே வேலையில் உள்ள மன அழுத்த சூழல்கள் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழிற்சார்ந்த மன அழுத்தத்தை போக்க முடியும் இவ்வாறு உளவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.