மேலும் அறிய

ஆதரவு இல்லையா நாங்கள் இருக்கிறோம்... காவல்துறைக்கு கை கொடுத்து சடலங்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்

ஓசூர் அருகே விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை, தருமபுரி நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர்.

ஓசூர் அருகே விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் தருமபுரி நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தருமபுரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு  மேலாக மை தருமபுரி என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றவரை காப்பகத்தில் சேர்த்தல், தினமும் அரசு மருத்துவமனை முன்பு மதிய உணவு வழங்குதல், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை பராமரித்தல் போன்ற பல்வேறு சேவைகளை பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் ஆதரவற்ற நிலையில், பலர் உயிரிழந்து,  சடலங்கள் அடக்கம் செய்யப்படாமல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை காவல் துறையினர் உதவியுடன் ஆதரவற்ற நிலையில் கிடந்த சடலங்களை மை தருமபுரி இலவச ஊர்தி சேவை என்ற பெயரில் நல்லடக்கம் செய்து வருகின்றனர். மேலும் உடல்களை நல்லடக்கம் செய்து விட்டு உறவினர்கள் செய்யும் பாரம்பரிய சடங்குகளையும் செய்து வருகின்றனர். மேலும் தங்கள் அடக்கம் செய்த ஆதரவற்ற சடலங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வருகின்றனர்

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சாலை விபத்தில் அடிபட்டு காயம் அடைந்துள்ளார். காவல் துறையினர் இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவரைப் பற்றி விசாரித்ததில் இவருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என தெரியவந்தது.

இதனை அடுத்து ஓசூர் போக்குவரத்து காவல் துறையினர் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மை தருமபுரி இலவச அமரர் ஊதி சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஓசூர் போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் பரிமளா மற்றும் மை தருமபுரி அமைப்பினர் இணைந்து, ஆதரவற்றைக் கடந்த ஆண் சடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தர்மபுரி நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதுவரை தருமபுரி மாவட்டம் முழுவதும் வயது மூப்பு, விபத்து உள்ளிட்டவைகளில் உயிரிழந்த முதியவர், குழந்தைகள் என 86 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து, உறவினர்கள் செய்யும் சடங்குகளை செய்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
Embed widget