மேலும் அறிய

"சினிமா, செல்போன் வந்ததால எங்களை யாரும் கண்டுக்கறது இல்ல" - தெருக்கூத்து கலைஞர்கள் மனவேதனை

தெருக்கூத்து ஆடும் கலைஞர்களில் அனைவரும் ஆண்களே பெண்கள் இன்று வரை இடம்பெறவில்லை என்பதும் கலைஞர்கள் கூறும் தகவல்.

அன்றைய காலகட்டங்களில் படை  திரட்டுவதற்காக மக்களிடம் போர் குணத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காக போர் நிகழ்ச்சியில் நிறைந்த பாரதக் கதைகள் கோயில்களில் படிக்கப்பட்டது. அதை மக்களிடம் கேட்கச் செய்யவும் வழக்கம் உருவாக்கப்பட்டது. இதற்காக மானியங்கள் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் ஆதாரங்கள் உள்ளது. 

நீதிக்கதைகளாக மாற்றம் பெற்ற தெருக்கூத்து

ஒரு காலகட்டத்தில் இந்த போர் கதைகள் நீதிக்கதைகளாக மாற்றம் பெற்றது. அதை சொல்லுபவர் உரிய வேடம் தரித்து மக்களிடம் கதை சொல்லியது கவனத்தை ஈர்த்தது. இந்த வகையில் தான் தெருக்கூத்து என்னும் ஒரு அரிய கலை உருவானது.
 
அடுத்து வந்த நாடகக்கலை, சிகரம் தொட்ட வெள்ளித்திரை என்று அனைத்து கலைகளுக்கும் தாய் வழியாக இருந்தது தெருக்கூத்து தான் என்றால் அது மிகையல்ல. 

ஒரு மனிதனின் வளர்ச்சி மற்றொரு மனிதனை மேம்படுத்தும் அதே நேரத்தில் விதையான ஒரு கலையின் வேர்கள் பெரும் மரமாய் வளரும் போது அதன் அடித்தளத்தை மறந்து விடும் என்பது இயல்பு. இந்த வகையில் காலத்தின் சுழற்சியால் மறைந்து நிற்கும் கலையாக தெருக்கூத்து என்னும் ஆதிகளை மாறி வருகிறது. 

இதற்கு உயிருட்டி புதுப்பிக்க கலைஞர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி அருகே தெருக்கூத்து கலைக்கு மூத்த கலைஞர்கள் உயிரூட்டியது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரண்டு நாள் தெருக்கூத்து நடத்தப்பட்டது

அழிவின் விளிம்பில் உள்ள தெருக்கூத்து கலையை நிலை நாட்ட போச்சம்பள்ளி அருகில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் இரு நாட்கள் கொல்லாபுரி அம்மன் நாடக குழுவினர்கள் தெருக்கூத்து நடத்தி புத்துணர்ச்சி ஏற்படுத்தினர். இதில் மான், மயில், சிலம்பாட்டம், கோலாட்டம், தெருக்கூத்து, நாடகம் என பல வகையாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

இதுகுறித்து தெருக்கூத்து நாடக ஆசிரியர் கூறியதாவது:- 

கதை சொல்லுதல், நாடகம் ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம் நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை அல்லது விழிப்புணர்வு கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும் நாட்டுப்புற கலைகளில் குறிப்பிடத்தக்க பொழுதுபோக்கு நிகழ்வாக சிறந்து விளங்குவது தெருக்கூத்து ஆகும்.

தெருக்கூத்து என்பது நாடோடி கூத்து வகையை சார்ந்ததாகும். தெருக்கூத்துக்கு நாடக மேடையோ, கட்சித் திரைக்கதையோ இல்லாமல் எளிய முறையில் தெருவிலும், திறந்தவெளிகளிலும் நடைபெறும். இரவு முழுவதும் தெருக்கூத்தை கண்விழித்து பார்த்து மகிழ்ந்து செல்வார்கள்.

இக்கூத்து பெரும்பாலும் காப்பிய இதிகாச புராண கதையை அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில் அமைந்திருக்கும். பொது மக்களுக்கு தெருக்கூத்து ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைந்திருப்பதோடு நீதி புகட்டும் வாயிலாகவும் உள்ளது.

தெருக்கூத்து என்னும் சொல் நாட்டியம், நாடகம் ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாகவே வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் கூத்து, நாடகம், ஆட்டம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோவில் திருவிழாக்களின் போது வழிபட்டு சடங்கின் ஒரு பகுதியாக தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

இந்த கோவில் திருவிழாக்களில் இப்போது வழிபாடு சடங்குகளின் ஒரு பகுதியாக தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. தினமும் இரவில் பாரத வாத்தியார் பாரத கதையை மக்கள் முன் எடுத்துரைப்பார். பம்பை, தாளம், முதலான இசைக்கருவிகளுடன் பின் பாட்டு பாடுபவர் இருப்பார்.

கதையை விவரித்து பின்பாட்டு குழுவினர் ஆமாம் போடுவர் இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து நடைபெறும். தற்போது சினிமா மற்றும் செல்போன் வருகையால் தெருக்கூத்து நாடகம் அழிந்து வருகிறது. தெருக்கூத்து நம்பி பல குடும்பங்கள் உள்ளது. ஆனால் இந்த கலை மெல்ல மெல்ல அழிந்து வருவதைக் கண்டு கலைஞர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் அரசு விழாக்கள், அரசு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களில் நாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தெருக்கூத்து நாடகம் நடத்தி வருகிறோம். இந்த வகையில் புளியம்பட்டி கிராமத்தில் இரண்டு நாட்கள் தெருக்கூத்து நடத்தினோம். இதற்கு கிராம மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே தெருக்கூத்து கலை அழியாமல் காக்க அரசு விழாக்களுக்கு இதை பயன்படுத்த வேண்டும் இதன் மூலம் தெருக்கூத்து கலைஞர்களோடு கலையையும் காக்க வேண்டும்.இவ்வாறு கூறினர். 

அனைவரும் ஆண்கள் தான் 

மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளை பெரும்பாலும் தெருக்கூத்தாக நிகழ்த்தப்படும். இதில் அர்ஜுனன் வில்வலைப்பு, திரௌபதி கல்யாணம், மாடுபிடி சண்டை, அரவான் கலப்படி போன்றவற்றை கலைஞர்கள் நிகழ்த்தி காட்டுவது தான் தனி சிறப்பு. பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் தான் தெருக்கூத்து நிகழ்த்தப்படும். இந்த கலையை கற்றுக் கொள்வதற்கு தனியாக பள்ளிகள் ஏதும் இல்லை தேர்ச்சி பெற்ற கூத்து வாத்தியார் ஒருவரை ஊருக்கு அழைத்து கூத்து கற்றுத் தருமாறு வேண்டுகின்றனர். பெரும்பாலும் இரவு வேலைகளில் கூத்துக் கற்றுத் தரப்படுகிறது. தெருக்கூத்து ஆடும் கலைஞர்களில் அனைவரும் ஆண்களே பெண்கள் இன்று வரை இடம்பெறவில்லை என்பதும் கலைஞர்கள் கூறும் தகவல்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget