மேலும் அறிய

நீர் திறப்பு அதிகரிப்பு.. காவிரியில் வெள்ளப்பெருக்கு.. ஆடிப் பண்டிகையில் மக்கள் ஏமாற்றம்

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரிப்பு. இரண்டாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நீர் திறப்பு அதிகரிப்பு.. காவிரியில் வெள்ளப்பெருக்கு.. ஆடிப் பண்டிகையில் மக்கள் ஏமாற்றம்

இன்று இரவுக்குள் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி அணையில் வினாடிக்கு 36,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 550 கன அடியாகவும், கிளை நதியான நுகு அணையில் இருந்து 4000 கன அடி என மொத்தம் 40,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 18000, 20,000 கனஅடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது.    

மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல் ஐந்தருவி தண்ணீரின்றி வறண்டு கிடந்த பாறைகளாக காட்சியளித்து வந்த நிலையில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். 

அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இன்று ஆடி பண்டிகை என்பதால், வழக்கமாக காவிரி ஆற்றில் புனித நீராட ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகளும் வருபவர்கள். ஆனால் நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளதால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 25,500 கனடியில் இருந்து 40,500 கன அடியாக அதிகரித்து இருப்பதால், இந்த தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.  காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget