மேலும் அறிய

EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

தவெக ஆட்சியில் நடப்பதை சொல்வதற்குக் கூட தணிக்கை உண்டா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 

சேனல்கள் முடக்கம்:

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ்ஜனம் ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய புதிய தலைமுறை
 சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது. 

பொய்க்கால் குதிரை அரசு:

தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.

சென்சார் போர்ட்:

யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout, உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா முதலமைச்சரே? அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இது தான் ஜனநாயகமா? இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?

அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா? ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் பேண்ட் வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “தி டிக்டேட்டர்” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!

ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஆட்சிகளில் அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள், விமர்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இது கடந்த காலங்களில் அந்தந்த ஆட்சியினர் மீது எதி்ரக்கட்சியினராலும், பொதுமக்களாலும் விமர்சனத்தை உண்டாக்கியது.  இந்த சூழலில் தவெக அரசும் இந்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. விரைவில் தமிழக அரசு இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
TTV vs Vijay : திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
Embed widget