மேலும் அறிய

மூன்று மாதத்தில் மூன்று கருக்கலைப்பு: சிக்கியது சிசுவில் கருவில் பாலினத்தை கண்டறிந்த கும்பல்!

பாலக்கோடு அருகே கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் கைது-கடந்த மூன்று மாதத்தில் மூன்று சட்டவிராத கருக் களைப்பு கும்பல்களை மருத்துவத் துறையினர் பிடித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களை குறி வைத்து கருவின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக ஒரு சிலர் செய்வதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மூன்று மாதத்தில் மூன்று கருக்கலைப்பு: சிக்கியது சிசுவில் கருவில் பாலினத்தை கண்டறிந்த கும்பல்!

உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட ஆட்சியர்

இதனால் மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவுப்படி கருவின் பாலினம் கண்டறியும் இடைத்தரகர்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு சுகாதாரத் துறை பணியாற்றும் செவிலியர்களே கருவின் பாலினம் கண்டறிய வேண்டும் என பேசுகின்றனர்.

இதனை அடுத்து  கிடைத்த தகவல்கள் இன்று பாலக்கோடு பகுதிக்கு கருவின் பாலினம் கண்டறிவதற்காக அழைத்துள்ளனர்.

காவல் நிலையத்தின் அருகிலேயே நடந்த சம்பவம்

அப்போது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் காவல் நிலையம் அருகில் சீங்கேரி கூட்ரோட்டில் உள்ள கார்த்தி என்பவரது(ஓட்டல்+வீடு) வீட்டில், 2 கர்பினி பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிய பரிசோதனை செய்துள்ளனர் இதற்காக பெண்களிடம் தலா ரூ.20,000 பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒருவர் பரிசோதனை செய்த இடம் வழங்கியதால் அவருக்கு பத்தாயிரம் மட்டும் கட்டணமாக வசூலித்துள்ளனர்.

சட்ட விரோதமாக செயல்பட்ட கும்பலை சுற்றி வலைத்த சுகாதாரத் துறையினர்

இதனைத் தொடர்ந்து நடமாடும் ஸ்கேன்  கர்ப்பிணி பெண்களுக்கு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் கற்பகம் என்பவர் சட்ட விரோதமாக  கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும்பொழுது மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் சட்டவிராத கருக்கலைப்பு கும்பலை சுற்றி வளைத்தனர். 

மேலும் சட்ட விரோதமாக கருவின் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் கும்பலை சேர்ந்த இடைத்தரகர் வடிவேல்,  ஸ்கேன் செய்யும் கற்பகம் என்பவரை, மருத்துவக் குழுவினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்பொழுது திருப்பத்தூரை சார்ந்த திருமலை, ஜோதி(பெண்) இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் அவர்களிடமிருந்த பாலினம் கண்டறியும் உங்களிடம் இருந்து நடமாடும் ஸ்கேன் இயந்திரம், பணம் ரூ18,000 பறிமுதல் செய்து, மகேந்திர மங்கலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கற்பகம் என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணியாற்றி வந்துபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த கருக்கலைப்பு கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தொடர்ந்து கருவி உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லுதல் கருக்கலைப்பு செய்தல் இது போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். 

ஏற்கனவே பிடிப்பட்ட கும்பல் மறுபடியும் சிக்கியது

கடந்த ஓராண்டுக்கு முன்பு காரிமங்கலம் பகுதியில் கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுவரையில் இந்த கற்பகம், சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் குற்றத்திற்காக மருத்துவத் துறையினர் மூலம் பிடிபட்டு, மூன்று முறை சிறை சென்று உள்ளார்.

சிறை சென்றாலும் தொடர்ந்து ஈடுபடும் கும்பல்

ஆனால் சிறை சென்று விட்டு வெளியே வந்ததும், மீண்டும் இந்த சட்ட விரோத செயலிலே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எனவே இதுபோன்று தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கற்பகம்  உள்ளிட்டோரை குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எனவே சட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். மேலும் கடந்த ஜூன் மாதம் பென்னாகரத்திலும், ஜூலை மாதம் பெரம்பலூரிலும், தற்பொழுது தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள மகேந்திரமங்கலம் காவல் நிலையம் அருகில் என மூன்று மாதத்தில் மூன்று கருக்கலைப்பு கும்பல்களை தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget