வெளியூரில் பணிபுரியும் தர்மபுரி மக்களே உங்களுக்கு ஹேப்பி நியூஸ் - வாங்க தெரிஞ்சுக்கலாம்
தர்மபுரி சிப்காட் தொழில் பூங்காவில் ஓலா எலக்ட்ரிக் பைக் கம்பெனி உள்ளிட்ட ஒன்பது கம்பெனிகள் தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது.
தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் அடுத்த மாதம் முதல் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின் தங்கிய மாவட்டமாக இருந்த தர்மபுரி
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம் தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் திருப்பூர், கோவை, கரூர் போன்ற இடங்களுக்கு மாவட்டம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தொழில் நகரமாக மாறும்
இதனை தடுக்க தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
1733.3 ஹேக்கரில் சிப்காட் தொழில் பூங்கா
இதை அடுத்து நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சிப்காட் அமைக்க 1783.3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தடங்கம் அத கப்பாடி, பால ஜங்கமணஹள்ளி, அதியமான் கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு ஆணை கிடைத்தது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. ஆட்சி மாற்றத்தால் அதிகாரிகள் மாற்றப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகிறது. 1733 ஏக்கர் நிலத்தில் 478.38 ஏக்கர் பட்டா நிலவும் 984.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிலை எடுப்பு மற்றும் உட்க ட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுவதாக 654.30 கோடி திட்ட மதிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சாலைகள் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது
தடங்கம் அருகே தர்மபுரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பகுதியில் இருந்து சிப்காட் தொழில் பூங்காவிற்கு 1.50 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனம் அமைய உள்ளது
மேலும் தர்மபுரி சிப்காட்டில் சாலை தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி சிப்காட் தொழில் பூங்காவில் ஓலா எலக்ட்ரிக் பைக் கம்பெனி உள்ளிட்ட ஒன்பது கம்பெனிகள் தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது.
மேலும் பெரிய கம்பெனிகள் அமைக்க புத்துணர்வு ஒப்பந்தம்
மேலும் சில கம்பெனிகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிப்காட்டில் தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதில் மூன்று கட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி பெற்று விட்ட நிலையில் இறுதி கட்ட விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அதற்கு அனுமதி கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு தனியாருக்கு இடம் அளவீடு செய்ய செய்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:-
தர்மபுரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அதற்கான பணிகள் செய்ய தனி அலுவலகம் அமைக்கப்பட்டது. டிஆர்ஓ இரண்டு தாசில்தார் மற்றும் விஏஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
18.300 பேருக்கு வேலை வாய்ப்பு
தர்மபுரி சிப்காட் தொழில் பூங்காவிற்காக 1733 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி சிப்காட் தொழில் பூங்காவில் தொழிற்சாலைகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மற்றும் அமைச்சகத்திடம் சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்து உள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் தொடர்ந்து தொழிற்சாலைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தால் 18,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.