‘நீங்க எல்லாம் கோயிலுக்கு உள்ளே வந்து அன்னதானம் போடக்கூடாது’ - பழங்குடியின பெண்ணுக்கு எதிர்ப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே புகழ்பெற்ற காணியம்மன் தேர் திருவிழா. பழங்குடியின பெண் அன்னதானமிட எதிர்ப்பு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தருமபுரி, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக இந்த ஆலயத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புகழ்பெற்ற இந்த இருளப்பட்டி காளியம்மன் கோவில் இந்தப் பகுதியில் அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இதனால் எப்பொழுதும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணமே இருக்கும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. அனைத்து சமூக மக்களும் ஆலயத்திற்குள் வந்து செல்லும் வகையில் இந்த ஆலயம் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தேர் திருவிழா
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வருடாந்திர கானியம்மன் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆலயத்திற்கு வேண்டுதல் செலுத்துபவர்களும் வேண்டிக் கொள்பவர்களும் இந்த தேர்த் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்த கடந்த ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பக்தர்கள் அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பழங்குடியின சமூகத்தை சார்ந்த குறவர் சமூகத்தினர் இந்தப் பகுதியில் அதிகளவில் வாழ்ந்து வருவதால் அவர்களின் காவல் தெய்வமாக இந்த ஆலயம் விளங்கி வருவதால் இந்த ஆலயத்திற்கு பெருமளவு பழங்குடியின சமூகத்தை சார்ந்த மக்கள் பெரும் திரளாக கூடுகின்றனர்.
பழங்குடியின பெண்ணை கோயிலுக்குள் அன்னதானம் போடக்கூடாது விரட்டிய காவல்துறை
அப்படி கூடுகின்ற இந்த கானியம்மன் திருவிழாவில் ஊத்தங்கரை பகுதியை சார்ந்த வங்கி ஊழியராக வேலை செய்யும் தம்பதியினர், பழங்குடியின குறவர் சமூகத்தை சார்ந்த சுகன விலாசம் (30) இவரது மனைவி அனிதா (27) ஆகிய இருவரும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த ஆலயத்தில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளனர்.
குழந்தை பாக்கியம் கொடுத்த அம்மனுக்கு அன்னதானம்
அதன்படி இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக அனிதா இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இந்த நிலையில் சில மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் ஆலய பகுதியில் நீங்கள் அன்னதானம் வழங்கக் கூடாது வேறு எங்காவது எடுத்துச் செல்லுங்கள் என காவல்துறை உதவியுடன் தம்பதியினரை மிரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
காவல்துறையிடம் கொண்டாடிய தம்பதியினர்
இந்த தம்பதியினர் காவல்துறையிடம் எவ்வளவோ மன்றாடியும் காவல்துறை கேட்காமல் இவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு வந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.