மேலும் அறிய
தருமபுரியில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் ஆய்வு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டறையில் ஆய்வு செய்தனர்.

தருமபுரியில் தேர்தல் கட்டுப்பாட்டறையில் ஆய்வு செய்தபோது
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் செலவின பார்வையாளர்கள் கட்டுப்பாட்டு அறை மற்றும் வீடியோ கண்காணிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டம் முழுவதும் 60 வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் வேட்பாளர்களின் செய்திகள் விளம்பரங்களை அறிவதற்காக வீடியோ கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் பிரமோத் நாயக், சந்தோஷ்குமார் ஆகிய இருவரும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். இந்த ஆய்வு கூட்டத்தில் தேர்தல் செலவுகளை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். அதேப்போல் பறக்கும் படை வாகனங்கள் ஒரே இடத்தில் நிற்காமல், பல்வேறு இடங்களுக்கு சுற்றி, வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதனை முறையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டறையில் ஆய்வு செய்தனர். இதில் கட்டுப்பாட்டறைக்கு வருகின்ற புகார்கள் முறையாக பதிவு செய்யப்படுகின்றனவா என்றும், பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் எங்கே இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வீடியோ கண்காணிப்பு அறையில் செய்தித்தாள் மற்றும் செய்திகள் குறித்தும் பார்வையிட்டனர். அப்பொழுது வேட்பாளர்கள் குறித்த செய்திகள், விளம்பரங்கள் ஏதேனும் வருகிறதா? உள்ளூர் மொழிநடையில் அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும், கண்காணித்து பதிவு செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















