மேலும் அறிய

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 70,000 கனஅடியாக சரிவு; ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க தொடரும் தடை

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு வினாடிக்கு 77,000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 70,000 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு தமிழகத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 77,000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 70,000 கன அடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில்-8-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து‌, இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பகற்காக கபினியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 52,000 கன அடியாகவும், நுகு அணையில் 5,000 கன அடி மொத்தம் 77, 000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை நீர்வரத்து  வினாடிக்கு 74,000 கன அடியாக குறைந்திருந்த நீர்வரத்து, மாலை படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 77,000 கன அடியாக இருந்து வந்தது. மேலும் இந்த நீர்வரத்து, ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, ஐந்தருவிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில் மழை குறைந்து வருவதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற நீரின் அளவு கபினியில் வினாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாகவும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் வினாடிக்கு 60,000 கன அடியில் இருந்து, வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து இன்று காலை நீர்வரத்து நிலவரப்படி வினாடிக்கு 77,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 70, 000 கன அடியாக குறைந்துள்ளது. 

மேலும் நீர்வரத்து குறைந்தாலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல் பகுதியில் பிரதான அறிவித்து ச் செல்கின்ற ஐந்தரு வி மற்றும் பாறைகள் உள்ளிட்டவர்கள் தெரியாத அளவிற்கு தண்ணீரில் மூழ்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் மழை குறைந்துள்ளதால், 2 அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு மேலும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல், ஏமாற்றமடைந்து, ஆற்றங்கரையோர பகுதியில் ஆங்காங்கே நின்று தண்ணீரின் அழகை கண்டு ரசித்து விட்டு  திரும்பிச் செல்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget