மேலும் அறிய

தர்மபுரியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தருமபுரியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் குறித்து மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு சுகாதாரத் துறை என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடிச்சு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனால்  தர்மபுரி மாவட்டத்தில் காவல் துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் ஒரு பகுதியாக  தருமபுரி மாவட்ட காவல் துறை மற்றும் தருமபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நேதாஜி பைபாஸ் சாலை, நெசவாளர் காலனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரதிபுரம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக் கணக்கான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் கலந்து மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவல் துறையினர், மாவட்ட விளையாட்டு அலுவலர், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் மத்தியில்  பேசிய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்  போதை பொருட்களை தொட்டால் எதிர்கால வாழ்வு சீரழிந்து விடும். போதைப் பொருளை பயன்படுத்தினால் நமது உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு வாழ்நாளே குறுகிவிடும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் அரிதாக மாறிவிடும். எனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் எவ்வித போதை பொருட்களும் பயன்படுத்தாத வகையில் மாணவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். போதை பழக்கம் உள்ளவர்களை நாம் அனைவரும் இணைந்து அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இதனை மாணவர் சமுதாயம் தான் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget