என் புருஷன் உயிர் முக்கியம்! எங்க ஊரிலே டாஸ்மாக் கடையை திறங்க: கோரிக்கை விடுத்த பெண்கள்
என் புருஷன் உயிர் முக்கியம்-எங்க ஊரிலே டாஸ்மாக் கடையை திறங்க-மதுக்கடை கேட்டு பெண்கள் மனு கொடுத்த வினோதம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், பளிஞ்சரஅள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமத்தில் ஏராளமான ஆண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த கிராமத்திற்கு அருகில் தருமபுரி - பென்னாகரம் சாலை ஆதனூர் அரசு மதுபானக் கடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதாக கூறி, இந்த கடை அகற்றப்பட்டுள்ளது. இந்த மது கடையை அகற்றி விட்டதால்,20 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மதுப் பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மதுக்கடைக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் செல்ல வேண்டி இருக்கு
இந்த கிராமத்திற்கு அருகாமையில் மதுக்கடை இல்லாததால், மது வாங்க செல்லும் மது பிரியர்கள், பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டியில் உள்ள அரசு மது கடைக்கு சுமார் 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
சந்து கடைகளில் விலை அதிகமாக வாங்குகிறார்கள்
இதனை பயன்படுத்தி கொண்டு, ஆதனூர் பகுதியில் சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சந்து கடைகளில் அரசு மதுக் கடைகளில், விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை, சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் ஒரு குவாட்டருக்கு மேல் 150 ரூபாய் அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
மதுக்கடையை எங்க ஊரிலே கொடுங்கள் பெண்கள் கோரிக்கை
அதனால் இந்த ஊர் மட்டுமல்லாது அருகில் உள்ள குக்கிரமங்களில் உள்ள மதுப் பிரியர்கள் மது அருந்த பென்னாகரம் நோக்கியே செல்ல வேண்டியிருப்பதால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் மதுக் கடைகளுக்கு செல்லும் பொழுது விபத்துக்கள் நேர்வதாகவும், ஆண்கள் வீட்டிற்கு வரும் வரையில் பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால் ஆதனூர் கிராமம் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் அரசு மதுக் கடை வந்தால், ஆண்கள் வெளியில் செல்லாமல் உள்ளூரிலேயே இருப்பார்கள். இதனால் ஆண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால், மதுபான கடையை தங்கள் ஊரில் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தங்கள் ஊரில் மதுக்கடை அமைக்கப்பட்டால் ஆண்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பார்கள்.
அதேபோல் தினமும் 500 ரூபாய் சம்பாதித்து, சந்து கடைகளுக்கு சென்று மது அருந்துவதால், அதில் 300 ரூபாய் வரை மது அருந்துவதற்கு செலவாகிறது. மேலும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தால் ஆண் குழந்தை காவல் துறையினர் தடுத்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் பிடிக்கும் சொன்னார் இதனால் குடும்ப செலவுகளை செய்வதற்கு வழியில்லாமல் போகிறது. எனவே தங்கள் கிராமத்திலேயே அரசு மதுபான கடை திறக்க வேண்டும். என ஆண்களோடு சேர்ந்து பெண்களும் மனு கொடுக்க வந்து சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் மனு கொடுக்க காதலன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வந்திருந்தனர்.