மேலும் அறிய

மக்களே உஷார் ரேபீஸ் நோயால் 36 சதவீத இறப்புகள்.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

உலக அளவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் என்பது பெரும் கவலையாக மாறியுள்ளது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், விலங்குகளோடு நெருங்கி பழகுவதும் அன்றாட மனித வாழ்வில் இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.

மக்களே உஷார் ரேபீஸ் நோயால் 36 சதவீத இறப்புகள்.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

 இப்படி விலங்குகளோடு நெருங்கிப் பழகும் போது பல்வேறு நோய்கள் உருவாகிறது. காச நோய், அடைப்பான் நோய், லேப்டா சை ரோஸிஸ், டெட்டனஸ் எனும் தசை விரைப்பு நோய், தாடை வீக்க நோய், நிணநீர் சுரப்பி நோய், என இந்த பட்டியலில் நீண்டு கொண்டே போகிறது.

 விலங்குகள் வழியாக மனிதர்களுக்கும் பரவும் நோய்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஜூலை 6-ஆம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது.

 லூயிஸ் பாயி ஸ்டர் என்னும் பிரெஞ்சு  உயிரியல் நிபுணரின் நினைவாக இதினம் அனுசரிக்கப்படுகிறது. 1885 ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி வெறிநாய்க்கடித்த சிறுவன் ஒருவனுக்குத் தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை செலுத்தி வெற்றி கண்டார் லூயிஸ் பாஸ்டர்.

 எனவே அவரை கௌரவிக்கும் வகையில் ஜூலை 6 -ஆம் தேதியானது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்தும் அவற்றின் அபாயங்கள் குறித்தும் மருத்துவர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

  பல்வேறு ஜினாட்டிக் நோய்கள் உள்ளன. இவை விலங்குகளில் தோன்றி பின்னர் மனிதர்களுக்கு பரவுகிறது. பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் வழியாக இது பரவுகிறது. சில வகை நோய்கள் விலங்குகளுக்கு இருந்தாலும் அவற்றை பாதிக்காது.

 ஆனால் நோய்க்கிருமிகள் மனிதர்களை எளிதாக தாக்கி பாதிப்புகளை உருவாக்கி விடும். இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை அதே நேரத்தில் அலட்சியமாக இருப்பதால் ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

 இது குறித்து விலங்கியல் மருத்துவ நிபுணர்கள்  கூறியதாவது :-

 விலங்குகளை தாக்கும் நோய்கள் மனிதர்களையும் தாக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு விலங்கிடம் இருந்து நேரடியாகவோ கொசுக்கள், ஈக்கள் போன்ற நோய் பரப்பிகளின் மூலமாகவோ மனிதர்களை தொற்றுகிறது.

 இவ்வகையில் பாக்டீரியா வைரஸ் புஞ்சை போன்ற நோய்கள் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இதேபோல் ஒட்டுண்ணிகள் மூலமும்  நோய்கள் மனிதர்களுக்கு பரவுகிறது. லப்டோஸ் ஃபைரோசிஸ்  என்னும் காய்ச்சல் நோய் எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது?

 ரேபிஸ் என்னும் வெறி நோய் நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை செல்ல பிராணியாக நாய்களை வளர்ப்பதில் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பராமரிக்காமல் தெருக்களில் விடும்போது அதற்கு பல்வேறு பாதிப்புகள் உருவாகிறது.

 இறைச்சி கழிவுகள் அசுத்தங்களை உண்ணும் இது போன்ற நாய்களுக்கு வெறியும் பிடிக்கிறது. இவ்வாறு வெறிபிடித்த நாய்கள் அதை வளர்ப்பவர்களையோ, சக மனிதர்களையோ கடிக்கும்போது  வெறிநோய் உருவாகிறது. குறிப்பாக 95% மனிதர்களுக்கு ரேபிஸ் என்னும் வெறிநோய் வெறிநாய் கடிப்பதன் மூலமே ஏற்படுகிறது. 

உலக அளவில்  ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் 36 சதவீதம் இந்தியாவில் தான் நிகழ்கிறது. என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள், கால்நடை வளர்ப்பார்கள் தோல் பதனிடம் தொழிற்சாலை பணியாற்றுபவருக்கு அந்த ராக்ஸ், பு ரூஸ் செல்லோ சிஸ் போன்ற நோய்கள் உருவாகிறது.

 பன்றி, பசு, கோழி, பூனை உள்ளிட்ட அனைத்து வகை செல்லப்பிராணிகளிடமும் மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் உருவாகிறது.

 எனவே செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அந்த விலங்குகளை சரியாக பராமரிக்க வேண்டும் அவற்றுக்கு ஏற்படும் நோய் தாக்கம் அதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும் இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினார் 

செல்லப்பிராணிகளை வளர்ப்போர் கடைப்பிடிக்க வேண்டியவை

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் இதையெல்லாம் பாலோ செய்யணும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நாய் மற்றும் செல்லப்பிராணி வளர்ப்போர் அதன் இருப்பிடத்தை கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டு விலங்குகளான நாய், பூனை மற்றும் பறவைகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட வேண்டும். 

இளம் வயது பிராணிகளுக்கு மாதந்தோறும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். நோய் பரவும் பூச்சினங்கள் பரவாமல் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget