மேலும் அறிய

தொடர் மழை! பிலி குண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தமிழக எல்லையான பிலி குண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு-நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், கர்நாடக மாநிலத்தின் அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் தண்ணீர் குறைவாக இருந்து. இதனால் 
காவிரி ஆற்றில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து,தமிழகத்திற்கு  நீர்திறப்பு முற்றுலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது.

மேலும் மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவேரி ஆற்றில் நீர்வரத்தின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பொழிய தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நான்கு மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து, வினாடிக்கு 1500 கன அடி வரை உயர்ந்தது. மேலும் மழை குறைவதும் அதிகரிக்கும் ஆக இருந்து வந்ததால், காவிரி ஆற்றில்  நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடி எனவும், 1500 கன அடி என அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக வறண்டு கிடந்த இடங்களில் தற்பொழுது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. மேலும் தொடர்ந்து கன மழை பொழிய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது அதே போல் சுற்றுலாவை நம்பி உள்ள சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மழை தொடர்வதாலும், காவேரி ஒழங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்து இருப்பதாலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget