மேலும் அறிய

தறிகெட்டு ஓடிய கார் ; குழந்தைகள் உயிரிழந்த சோகம் - காரில் வந்தவர்கள் எஸ்கேப்

விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேலாரஹள்ளி அருகே செம்ம நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்திவேல் (வயது 31) எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வருகிறார். முருகேசன் மனைவி இந்துமதி 26 இருவருக்கும் திருமணம் ஆகி  இரண்டு வயதில் மேகவர்ஷினி என்ற மகளும், மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சக்திவேல் தனது மனைவி குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கந்திகுப்பம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் பெரிய பணமுட்லு என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது ஊத்தங்கரை அருகே காக்கங்கரை பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதி வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது எதிரே சக்திவேல் குடும்பத்தினர் வந்த இரு சக்கர வாகனம் மீது கார் வேகமாக மோதியது.  தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் மற்றும் மனைவி குழந்தைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த அஞ்சூரை சேர்ந்த யாசின் அலி 35 ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தால் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே யாசின் அலி, குழந்தைகள் மேகவர்ஷினி, 3 மாத ஆண் குழந்தை உள்ளிட்ட மூன்று பேரும் பரிதாபமாக இருந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய சக்திவேல் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த இடத்தில் கந்திகுப்பம் காவல் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த விபத்துக்கு குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடியவர் குறித்தும், கார் நம்பர் பிளேட்டை வைத்து அவர்களது முகவரியை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு குழந்தைகள் ஒரு ஆண் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
தேர்தல் ஆணையர் பதவி விலகுக! தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பேரிழப்பு - விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையர் பதவி விலகுக! தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பேரிழப்பு - விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்
Pondy Melange 2027: புதுச்சேரியின் புதிய அடையாளம்: ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ மூலம் சுற்றுலா வளர்ச்சி!
Pondy Melange 2027: புதுச்சேரியின் புதிய அடையாளம்: ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ மூலம் சுற்றுலா வளர்ச்சி!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget