மேலும் அறிய

கோவை: தொடர் கனமழை: தண்ணீர் லாரி மீது வேரோடு சாய்ந்த மரம்!

காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் தினந்தோறும் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தொடர் மழை பெய்கிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றும், நாளையும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தொடர் கனமழை

காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சில பகுதிகளில் இடியுடனும் கனமழை பெய்தது. போத்தனூர், சாய்பாபா காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், டிவிஎஸ் நகர், ரயில் நிலையம், வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே உடையாம்பாளையம் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் பலத்த காற்று வீசியதால், ஒரு வீட்டின் தகரக் கூரை ஒன்று பறந்து மின் கம்பி மீது விழுந்தது. அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மின் கம்பியில் விழுந்திருந்த தகர கூரையை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கோவை: தொடர் கனமழை: தண்ணீர் லாரி மீது வேரோடு சாய்ந்த மரம்!

மரம் விழுந்து விபத்து

தொடர் கனமழை காரணமாக கோவை மாநகரின் முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தண்ணீர் தேங்கியதால் நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே கோவை கே.ஜி. தியேட்டர் பேருந்து நிறுத்ததில் இருந்த ஒரு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த மரம் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளைகளை எடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பத்திரமாக மீட்டனர். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பாலம் அமைக்கும் பணி

கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் அடியில், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மழை நீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது இந்த பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரினை வெளியேற்றும் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
பிரியங்கா காந்திக்காக களத்தில் குதிக்கும் மம்தா.. கச்சிதமாக வேலையை முடித்த சிதம்பரம்!
பிரியங்கா காந்திக்காக களத்தில் குதிக்கும் மம்தா.. கச்சிதமாக வேலையை முடித்த சிதம்பரம்!
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Breaking News LIVE: குறைந்த விலையில் “HD செட் ஆப் பாக்ஸ்’ - தமிழ்நாடு அரசு திட்டம்
Breaking News LIVE: குறைந்த விலையில் “HD செட் ஆப் பாக்ஸ்’ - தமிழ்நாடு அரசு திட்டம்
Embed widget