மேலும் அறிய

அச்சுறுத்தும் காட்டு யானை! மக்களை பாதுகாப்பை உறுதி செய்க - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் கார்த்திக் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம், கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் கார்த்திக் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அதே காட்டு யானை இன்று காலை பொதுமக்கள் சிலரையும் தாக்கியது. கடந்த இரண்டு தினங்களில் காட்டு யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

காவல் துறையினருடன் வாக்குவாதம்

அப்போது அனைவரையும் உள்ளே அனுமதிக்காத நிலையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, முன்னாள்  அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகிய இருவரும் கீழே இறங்கி வந்து பொதுமக்களை சந்தித்து பேசினர்.

யானை நடமாட்டம்:

அப்போது யானை நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி  பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவையில் மனு கொடுக்க வந்த  பொதுமக்களை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். பிரச்சினையை சொல்ல வந்த மக்களை  தடுப்பது என்பதை ஏற்க முடியாது.

அச்சுறுத்தும் காட்டு யானை! மக்களை பாதுகாப்பை உறுதி செய்க - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

யானையை இடமாற்றம் செய்ய வேண்டும்

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி யானைகள் வருகின்றது. இதனால்  பொதுமக்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுகின்றது. விராலியூர்  பகுதியில் காட்டுயானை தாக்கியதில் நேற்று உயிரிழந்துள்ளார். இன்று காலையிலும் பொதுமக்களை யானை தாக்கி இருக்கின்றது.

கோவை  வனத்துறை யானைகளை விரட்டுவதில் முறையாக செயல்படுவதில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிதி உதவியும் வழங்குவதில்லை. தொண்டாமுத்தூர் பகுதியில் டார்ச் லைட் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். வனப்பகுதி அருகில் அகழி, மின்வேலி போன்றவை அமைக்க வேண்டும். அதை முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாக கொடுக்க வேண்டும். விளை நிலங்கள் சேதத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

வனத்துறை மீது புகார்

நேற்று ஒருவர் இறந்த நிலையில், வனத்துறை அங்கேயே இருந்திருந்தால் இன்று காலை மக்கள் காயம் அடைந்து இருக்க மாட்டார்கள். அந்த பகுதியில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வரும் சம்மந்தப்பட்ட யானையை பிடித்து  வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

காட்டுயானைகளை விரட்டுவதில் கோவை வனத்துறை உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதில்லை. யானைகளை விரட்ட உரிய  நடவடிக்கைகள் எடுப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும். மனித - வனவிலங்கு மோதல்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget