மேலும் அறிய

சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

வால்பாறை காவல் துறையினர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிறு குன்றா வனப் பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இங்கு வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரனின் விருந்தினர்களாக, சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் நேற்றிரவு தங்கி உள்ளனர். இதனிடையே இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் இருவரும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி வனப் பகுதியில் சுற்றியதாக தெரிகிறது. இதனை இரவு நேர ரோந்து பணியில் இருந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் பார்த்துள்ளார். இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் சுற்றுலா பயணிகளை கண்டித்ததாகவும், இரவு நேரத்தில் வன விலங்குகள் அதிகம் நடமாடுவதால் வெளியில் சுற்ற வேண்டாமென கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வனச் சரகருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!
சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் சுற்றுலா பயணிகளை  வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பரிச்சமற்ற பகுதியில், இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தி வெளியற்றதாகவும், மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வால்பாறை காவல் துறையினர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்தனர். இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

சுற்றுலா பயணிகள் நீதிபதி ஒருவரின் உறவினர்கள் எனவும், அதன் காரணமாக வனச்சரகர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை வனச் சரகரை முறையாக விசாரிக்காமல் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி, அட்டகட்டி சோதனைச் சாவடி முன்பு 200க்கும் மேற்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வனத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனச்சரகரை மிரட்டியதோடு, நீதித் துறையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனச்சரகரை கைது செய்து இருப்பதாக வன ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வனச்சரகரை கைது செய்ததை கண்டித்தும், வனப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலம் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற ஊழியரின் புகாரின் பேரில் வனச்சரகர் கைது செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் வன ஊழியர்கள் போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget