மேலும் அறிய

Crime : கோவை கார் வெடிப்பு வழக்கு ; மேலும் இருவர் கைது

தீவிரவாத செயல்களுக்கு தயாராகும் வகையில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், கடம்பூர் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கூட்டம் நடத்தியது தெரியவந்தது.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.


Crime : கோவை கார் வெடிப்பு வழக்கு ; மேலும் இருவர் கைது

கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 43 இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மேலும் ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக் (39), உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ் கான் (28) ஆகிய 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பேரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை அல் ஹமீன் காலணியை சேர்ந்த ஷேக் ஹியததுல்லா மற்றும் உக்கடம் வின்செண்ட் சாலையை சேர்ந்த சனோபர் அலி ஆகிய இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத செயல்களுக்கு தயாராகும் வகையில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், கடம்பூர் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட உமர் பாரூக் நடத்திய இக்கூட்டத்தில் ஜமேசா முபின், முகமது அசாரூதின், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி பங்கேற்றதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget