மேலும் அறிய

பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ; பாரத்சேனா அமைப்பினர் இருவர் கைது..!

பெரியார் குறித்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியதற்காக முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

பகுத்தறிவு பகலவன் எனப் போற்றப்படும் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இதன்படி இன்று சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பெரியார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ; பாரத்சேனா அமைப்பினர் இருவர் கைது..!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பறை இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் முகமூடி அணிந்தபடி வந்து சமூக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல பெரியார் பிறந்த நாளை பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் கொண்டாடினர்.


பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ; பாரத்சேனா அமைப்பினர் இருவர் கைது..!

இந்நிலையில் காந்திபுரம் அருகே உள்ள 100 அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில்  பெரியாரைப் பற்றி அவதூறாக பாரத் சேனா என்ற அமைப்பின் சார்பில் நேற்றிரவு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, அச்சுவரொட்டிகளை ஒருவர் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அந்த நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுவரொட்டியை ஒட்டியவர் ரவிக்குமார் என்பதும், கோவை மாவட்ட பாரத் சேனா இளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் (31) என்பவரும், பாரத் சேனா பீளமேடு பகுதி உறுப்பினர் தமிழரசன் (30) என்பவரும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லியதும் தெரியவந்தது. இதையடுத்து சுவரொட்டிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் ரவிக்குமாரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் ரவிக்குமார் கூலித் தொழிலாளி என்பதும், பாரத் சேனா அமைப்பை சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லியதும் தெரியவந்தது. இதன் பின்னர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். பெரியார் குறித்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியதற்காக முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
Embed widget