மேலும் அறிய

உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்று (ஆக.9) முதல் 7 நாட்களுக்கு ரத்து! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி மலை ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையே நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த செய்தி, மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலை ரயில் பாதையில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரயில்வே நிர்வாகம், பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, விரைவில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு தொகை முழுவதும் திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் விரைவில் பராமரிப்பு பணிகளை முடித்து, மலை ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்று (ஆக.9) முதல் 7 நாட்களுக்கு ரத்து! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மலை இரயில் பயணம்

சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரிக்கு மலை இரயில் பயணம் செய்வது என்பது, ஒரு உன்னத பயண அனுபவமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. இந்த நீலகிரி மலை இரயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயிலாக அமைந்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுந்து வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிள் இயற்கையின் ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகளை காண முடியும். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Embed widget