மேலும் அறிய

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளி பரிசு - உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய் ரசிகர்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளியை பரிசு வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் மணமக்களை ஆச்சரியப்படுத்தினர். தமிழ்நாட்டில் கடந்த  ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வரத்து குறைந்து மாநிலம் முழுவதும் இருக்கும் சந்தைகள் மற்றும் கடைகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. இதனிடையே தக்காளி விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் வெங்காயம் மற்றும் தக்காளி விலை ஏறும் போது மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் தெறிக்க விடுவார்கள். அதே போல இம்முறையும் தக்காளி குறித்த மீம்ஸ்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. ‘பெட்ரோல் விலையை தாண்டி தக்காளி விலை விற்று வருகிறது’, ’தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி?’ என கூகுளில் தேடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் போன்ற அதிரடி ஆபர்களும் வழங்கப்பட்டு வருகிறது. 


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளி பரிசு - உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய் ரசிகர்கள்

விலை உயர்வை வெளிப்படுத்தும் வகையில் மணமக்களுக்கு பெட்ரோல், வெங்காயம் உள்ளிட்டவற்றை அவர்களது நண்பர்கள் பரிசாக வழங்கி வருவது வழக்கம். அதன்படி விலை மதிக்கத்தக்க பொருளாக தக்காளி மாறியிருப்பதை உணர்த்தும் வகையில் திருமண வரவேற்பில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளியை பரிசாக மணமக்களுக்கு வழங்கினர்.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் மகேஷ்வரன். இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இன்று கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பலர் மணமக்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில், மதிப்புமிக்க பொருளாக தக்காளி மாறியிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் தக்காளியை பரிசாக வழங்கியதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற நிலையில், வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget