மேலும் அறிய

Thirumavalan About Annamalai: அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை - திருமாவளவன்

தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சா வழி முறை என்பது காந்தியடிகளைப் போல கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது எனவும் இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார். அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும் அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புவதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு பெரிதும் அவர் முயற்சிப்பதாக தெரிவித்தார். எனவே ஆளும் கட்சியினர் மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் தான் எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புவதாக தெரிகிறது என கூறினார். 

Thirumavalan About Annamalai: அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை - திருமாவளவன்

கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய அரசியல் எனத் தெரிவித்தார். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் இவ்வாறு அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்பு போட மாட்டேன் சாட்டையால் அடித்துக் கொள்வேன் என்று பேட்டி அளித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் ஏன் இப்படிப்பட்ட முடிவை எல்லாம் எடுக்கிறார். இது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சா வழி முறை என்பது காந்தியடிகளைப் போல கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் காந்தியடிகள் கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்தது இல்லை என தெரிவித்தார். அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது என தெரிவித்தார். 

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவியின் விவரங்கள் வெளிவந்திருக்கக் கூடாது எனவும் அது ஏற்புடையது அல்ல எனவும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்த திருமாவளவன், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அந்த எஃப் ஐ ஆர் பதிவுகளை காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருந்தது என கேள்வி எழுப்பியதற்கு காவல்துறையே பதிவேற்றம் செய்துள்ளதா? அவ்வாறு இருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் காவல்துறை அதிகாரிகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். 

Thirumavalan About Annamalai: அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை - திருமாவளவன்

சிறுபான்மையினருக்கான ஒரே தலைவர் மோடி தான் என்று அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, இது தான் 21ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த நகைச்சுவை என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பதாகவும், திரும்பத் திரும்ப இது குறித்து விளக்கம் அளித்தாலும் அவர்கள் விரும்புகிற சூதாட்டத்தை நடத்தப் பார்க்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் அதற்கு இடம் கொடுக்காது அரசியல் ஆதாய கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை எங்களுக்கு ஒரு நோக்கம் உள்ளது என்றார். தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நட்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே நாங்கள் யாரையும் மிரட்டுகின்ற நிலையில் இல்லை எங்களையும் யாரும் மிரட்டுகின்ற நிலைமையில் நாங்கள் இல்லை என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget