மேலும் அறிய

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் 1500 பக்க விசாரணை ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.. விவரம்..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் தனிப்படை காவல் துறையினர் சமர்ப்பித்தனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான 1500 பக்க விசாரணை ஆவணங்களை தனிப்படை காவல் துறையினர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் 1500 பக்க விசாரணை ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.. விவரம்..

இதனிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை சீல் வைக்கப்பல்ட்ட கவர்களில் வைத்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்படை காவல் துறையினர் சமர்ப்பித்தனர். இந்த ஆவணங்களின் நகல்கள் சிபிசிஐடி காவல் துறையினரிடம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விரைவில் விசாரணையை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : Crackers Bursting Time: தீபாவளி வெடிகளுக்கு இந்த கட்டுப்பாடுகளா? அறிவித்த மாசுக்கட்டுப்பாடு வாரியம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget