மேலும் அறிய

Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

ஆசிரியர் கைது

அப்போது அந்தப் பள்ளியில் 7, 8, 9 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் அவர்களிடம் பள்ளியில் 7 வது மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியரான கீதா மற்றும் ஷியாமளா உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, பட்டதாரி ஆசிரியை சண்முகவடிவு உள்ளிட்டோர் அதனை மூடி மறைக்கும் வகையில் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் அளிக்காமல் இருந்து வந்ததாகவும், ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆசிரியர் பணியிடை நீக்கம்

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முகவடிவு, கீதா, ஷியாமளா ஆகியோர் இச்சம்பவத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜமுனா, ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு ஆகியோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் இடைநிலை ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த 4 பெண் ஆசிரியைகளிடம் விசாரணை தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu Kashmir Cong.Manifesto : தள்ளி போய் விளையாடுங்க!காலரை தூக்கும் ராகுல்! காங்.வசமாகும் காஷ்மீர்!MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?Vinesh Bajrang Punia Congress |ராகுலின் 2 அஸ்திரங்கள்!பாஜக ஆட்டம் OVER! தட்டித்தூக்கிய காங்கிரஸ்!SFI Protest on Mahavishnu issue | ”நடவடிக்கை எடுக்கலனா..” கடுப்பான மாணவர்கள்!பள்ளி வாசலில் போராட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Vettaiyan: மனசிலாயோ! ரஜினிகாந்தின் வேட்டையன் பாடலை கேட்க ரெடியாகுங்க! எப்போ வருது?
Vettaiyan: மனசிலாயோ! ரஜினிகாந்தின் வேட்டையன் பாடலை கேட்க ரெடியாகுங்க! எப்போ வருது?
Breaking News LIVE: குறைந்த தங்கம் விலை: எவ்வளவு? இன்றைய நிலவரம்
Breaking News LIVE: குறைந்த தங்கம் விலை: எவ்வளவு? இன்றைய நிலவரம்
Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!
Vinayagar Chaturthi 2024: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!
CAT 2024: இன்னும் சில நாட்கள்தான்...எம்பிஏ சேர கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
CAT 2024: இன்னும் சில நாட்கள்தான்...எம்பிஏ சேர கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Embed widget