மேலும் அறிய

Coimbatore: கோவை அன்னூரில் தொழிற்பூங்காவுக்கு எதிரான போராட்டம் தொடரும் - விவசாயிகள் அறிவிப்புக்கு காரணம் என்ன..?

விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று அரசு அறிவித்தாலும் கோவை அன்னூரில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3862 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், தொழில் பூங்கா அமைத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் மாசு ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனவும் கூறி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அன்னூர் தொழிற்பூங்கா:

இதனிடையே விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் தொழில்பூங்கா அமைக்கப்படும் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்திலும் தொழில் பூங்கா அமைக்க விடமாட்டோம் எனவும், தொழில் பூங்கா அமைக்கும் அரசாணையை இரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அன்னூர் தொழில் பூங்கா தொடர்பாக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழில் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.

கோவை மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொழில்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் கோரிக்களையை கருத்தில் கொண்டும், விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்களை (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும், மேலும் எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

அதேசமயம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த சாத்தியமில்லை எனவும், தொழில் பூங்கா அமைக்கவும் சாத்தியமில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவன நிலமாக இருந்தாலும், தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்களின் ஒப்புதல் வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் தொழிற்சாலை வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளனர் எனவும் கூறும் அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காணந்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Toyota Innova Hycross: அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Embed widget