மேலும் அறிய

Governor RN Ravi : ’மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக சொல்வது உண்மையில்லை’ - ஆளுநர் ஆர்.என்.ரவி

”மத்திய அரசு மொழியை திணிக்க முயல்வதாக சொல்லப்படுவது உண்மையில்லை. புதிய கல்விக் கொள்கை தாய் மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது.”

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 569 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதற்கு முன்னதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது, “நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. விரும்புபவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி விருப்ப பாடமாக இருக்க வேண்டும். இந்தி கட்டாயம் என இருக்க கூடாது. சர்வதேச மொழி ஆங்கிலமும், உள்ளூர் மொழி தமிழும் இருக்கிறது. இந்த இரண்டு மொழிகள்தான் கட்டாயம். இந்தி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் கோவையில் பானிபூரி விற்பவர்கள் எல்லாம் யார்? அது ஒரு காலம். எந்த மொழியை கற்கவும் தயாராக உள்ளோம். மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தியை கட்டயமாக்கக்கூடாது. 

Governor RN Ravi : ’மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக சொல்வது உண்மையில்லை’ - ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்படும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை தான் பின்பற்றுவோம். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை, மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மத்திய அரசிடம் தெரியப்படுத்த வேண்டும். இதனை ஆளுநர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன் என தமிழில் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்து கொண்டு இருக்கிறது. நம் நாடு பல்வேறு, இனம், மொழி கலாச்சாரம் கொண்டது. 1947 ம் ஆண்டுக்கு முன்பிருந்தே, பாரதம் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது.

Governor RN Ravi : ’மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக சொல்வது உண்மையில்லை’ - ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நிலையில் இந்த அரசு கவனம் செலுத்துகின்றது. மத்திய அரசு மொழியை திணிக்க முயல்வதாக சொல்லப்படுவது உண்மையில்லை. புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது. தமிழ் பழமையான மொழி. தமிழ் சிறப்பான உயர்ந்த மொழி. பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதைப்போல, இந்தியாவில் உள்ள பிற பல்கலைக்கழகங்களிலும் இருக்கை அமைக்கப்படவேண்டும். சுப்ரமணிய பாரதி பெயரில் பனாரஸ் பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. மொழித்திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்புள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget