மேலும் அறிய

Watch Video : ‛ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வாரங்க..‛ -திமுகவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ!

திமுக ஆட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி கள்ளப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. கிராமத்தில் புதிதாக மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதனைக் கண்டித்தும் மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடக் கோரியும், கள்ளப்பாளையம் கிராம மக்கள் பல்லடம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். 

Watch Video : ‛ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வாரங்க..‛ -திமுகவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ!

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமியும் பொது மக்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவை மாவட்ட டாஸ்மாக் நிறுவன மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்து கள்ளப்பாளையம் பகுதியில் கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்வோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

"அதிகாரிகள் ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வாரங்க" - திமுக ஆட்சிக்கு ஆதரவாக பேசிய சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி@abpnadu pic.twitter.com/FBwxHTs2Lx

— Prasanth V (@PrasanthV_93) November 25, 2021

">

இதனிடையே போராட்டக் களத்தில் செல்போனில் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி பேசியுள்ளார். அப்போது “அதிகாரிகள் பண்ணுற வேலை இப்போ ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வரனும். ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வர ரெடியாகிட்ட போல” என பேசினார். திமுக ஆட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் தொகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கனகராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே கனகராஜ் உயிரிழந்ததை அடுத்து நடந்த சட்ட மன்ற இடைத்தேர்தலில் அவரது உறவினரான கந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2021 தேர்தலிலும் தொடர்ந்து அவர் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget