மேலும் அறிய

மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் - எஸ்.பி. வேலுமணி கோரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு இருப்பதை தடுக்க வேண்டும். தமிழகஅரசு இதை புரிந்து கொண்டு தடுக்க வேண்டும்

போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகம் போதைப்பொருட்கள் தலைநகரமாக மாறும் சூழல் உள்ளது. போதைப்பொருளில் இருந்து மக்களை, இளைஞர்களை காப்பாற்ற அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் அதிமுக. திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை கண்டிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. ஜாபர் சாதிக்கிடம் இருந்து 2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கைப்பற்றினார்கள். கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. காவல் துறையினர் திமுகவிற்கு அடிமையாக இருக்கக் கூடாது.


மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் - எஸ்.பி. வேலுமணி கோரிக்கை

கோவை மாவட்டத்திற்கு திமுக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.க்களை யாராலும் பார்க்க முடியவில்லை. தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள். கோவைக்கு எந்த திட்டமும் தராத திமுகவிற்கு பாடம் கற்றுத் தர வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. திமுக பொறுப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் துளியும் போதைப் பொருள் இல்லாமல் இருக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு இருப்பதை தடுக்க வேண்டும். தமிழகஅரசு இதை புரிந்து கொண்டு தடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் கோவையில் எந்த வளர்ச்சியும் இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. குடிநீர் பிரச்சனை இருக்கிறது. மாணவர் சமுதாயம் சீர்கெட்டு கொண்டு இருப்பதால் இந்த போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget