மேலும் அறிய

கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா ஆசாமி... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி...

கோவை ஒண்டிப்புதூரில் கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா ஆசாமி: குரைத்த நாயை குத்த முயன்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு.

கோவை ஒண்டிப்புதூர் குடியிருப்பு பகுதியில், கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா போதை ஆசாமி ஒருவர், குரைத்த நாயை குத்த முயன்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபரை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

போதையில் கத்தியுடன் அட்டகாசம்

ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத ஒருவர் போதையில் அந்த பகுதியில் நடந்து சென்ற போது, அங்கிருந்த நாய்கள் அவரை பார்த்து குரைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கையில் வைத்திருந்த கத்தியால் நாயின் முகத்தை குத்த முயன்றுள்ளார்.

இதனை நேரில் பார்த்த அப்பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி என்பவர், உடனடியாக சத்தம் போட்டு அந்த நபரை விரட்டியுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்த முழு காட்சிகளும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சி.சி.டி.வி காட்சியில் சிக்கிய ஆசாமி

பின்னர், சம்பவம் தொடர்பாக ஜெயந்தி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த போதை ஆசாமியை அடையாளம் கண்டு பிடித்தனர். விசாரணையில், அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் அந்த நபரை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கத்தியுடன் போதையில் சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் போதை ஆசாமிகள் சுற்றித் திரிவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் எனவும், இதுபோன்ற சம்பவங்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget