Savukku Shankar Arrest: காவலர்கள், பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு.. சவுக்கு சங்கர் அதிரடி கைது!
தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.
இரவு 3 மணி அளவில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த சவுக்கு சங்கர் கைது செய்து காவல்துறையினர் கோயம்புத்தூர் அழைத்துச் சென்றுள்ளனர்.
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது:
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுகிறார். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வரும் வழியில் சிறிய விபத்துக்குள்ளானது.
இதில் சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, வரும் வழியில் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர் கோவைக்கு அதே வாகனத்தில் வந்து கொண்டு இருக்கின்றனர்