மேலும் அறிய

'கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கக்கூடாது’ - எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் முன்னாள் அதிமுக அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள முக்கியமான 10 பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து தங்களது தொகுதியில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் முன்னாள் அதிமுக அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர். 


கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கக்கூடாது’ - எஸ்.பி.வேலுமணி

பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அரசு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கடிதம் வந்ததன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் வழங்கப்பட்டது. அந்த கோரிக்கையில் அதிகமாக முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசியமான கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு வந்து ஒன்றரை வருடமாகிறது. முந்தைய ஆட்சியில் சாலைகள் அனைத்தும் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலாவதாக அளித்துள்ளோம். 

மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக, பைப் லைன் தோண்டிய சாலைகள் அனைத்தும் மழை வருவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த அரசு முதலில் சாலைகளை சரி செய்ய வேண்டும். ஜெயலலிதா காலத்தில் ஒப்பந்தம் கோரிய 500 சாலைகளை இந்த அரசாங்கம் ரத்து செய்தது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாலங்கள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்கப்பட வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குடிநீர் விநியோகம் செய்ய 10,15 நாட்கள் ஆகிறது. அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை.


கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கக்கூடாது’ - எஸ்.பி.வேலுமணி

முந்தைய ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டும். வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50% நிறைவடைந்த பணிகளை ஏதோ உள் நோக்கத்தோடு திமுக அரசு நிறுத்தி விட்டது. அப்பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென மாவட்ட ,ஆட்சியரிடம் கூறியுள்ளோம். அதனால் நகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும்” என தெரிவித்தார். எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக திமுக எதிர்ப்பு தெரிவித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget