மேலும் அறிய

ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி! 10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்பு

கோவையில் ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி நடைபெற்றது. இதில் 10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்றனர்.

மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் மற்றும் மண் வளத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகள், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சர்வதேச அமைப்பான ‘சாயில் ஃபுட் வெப் ஸ்கூல்’ (Soil Food Web School), கோவையில் உள்ள சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்தின் மாதிரி பண்ணையில் இரண்டு ‘மண் உயிரியல்’ பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது.

மண் உயிரியல் பயிற்சி:

இதுகுறித்துப் பேசிய சாயில் ஃபுட் வெப் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் இவான் பக்மேன், “எங்களது பயிற்சி நிகழ்ச்சியை முதன்முறையாக இந்தியாவில் நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகளுடன் இணைந்து மண் காப்போம் இயக்கம் மேற்கொண்டு வரும் களப்பணிகளும், பல்வேறு சமூகங்களுடன் கொண்டுள்ள வலுவான தொடர்புகளும் ஈஷா மாதிரிப் பண்ணையை பயிற்சி அளிக்கும் களமாக தேர்ந்தெடுக்க முக்கியக் காரணங்களாக அமைந்தன. 

அதிலும் குறிப்பாக ஏற்கனவே இயற்கை மற்றும் மீளுருவாக்க விவசாய முறைகள் இந்த மாதிரி பண்ணையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகையால் 10 நாடுகளைச் சேர்ந்த 46 பங்கேற்பாளர்கள் தாங்கள் கற்றவற்றைச் செயல்முறையில் செய்து பார்க்க ஏற்ற இடமாக  இம்மாதிரி பண்ணை அமைந்தது” என்றார்.

பயிற்சி நிறைவு:

சத்குருவால் தொடங்கப்பட்ட உலகளாவிய ‘மண் காப்போம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மண் காப்போம் மாதிரி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மண்ணின் கரிம வளத்தை மீட்டெடுப்பதற்கும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும் உதவும் மரம் சார்ந்த விவசாயம், இயற்கை விவசாயம் மற்றும் மீளுருவாக்க விவசாய முறைகள் செயல்முறையில் பரிசோதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு களப் பயிற்சிகளாக அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் இந்த விவசாய முறைகளின் பலன்களைப் பரவலாகக் கொண்டு செல்ல முடிகிறது.

இந்த மாதிரி பண்ணையில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியான இரண்டு நாள் ‘மண்ணில் வாழும் உயிர்கள்’ பயிற்சி, இம்மாதம் (அக்.) 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 61 பேர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, அக். 19 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற 10 நாள் மண் உயிரியல் சிறப்புப் பயிற்சி கடந்த 30ம் தேதி நிறைவடைந்தது. இதில் 6 கண்டங்களைச் சேர்ந்த 10 நாடுகளில் இருந்து 46 பேர் பங்கேற்றனர்.

வெளிநாட்டினர் பங்கேற்பு:

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் இருந்தும், கோஸ்டாரிகா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் விவசாயிகள், வேளாண் ஆலோசகர்கள், இயற்கை விவசாய வடிவமைப்பாளர்கள், நுண்ணுயிரியலாளர்கள், வேளாண் தொழில் வல்லுநர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் மண் அறிவியல் வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

பயிற்சியில் செயல்முறை அனுபவம் அளிப்பது குறித்துப் பேசிய சாயில் ஃபுட் வெப் ஸ்கூலின் கல்விப் பிரிவு இயக்குநர் லோய்டா, “வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட்களை (மட்கிய உரம்) அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பது, பங்கேற்பாளர்களுக்கு நேரடியான அனுபவத்தை அளித்தது. ஒரு கம்போஸ்ட் ஏன் மற்றொன்றிலிருந்து மாறுபடுகிறது, அதில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது பயிற்சியின் முக்கியப் பகுதியாகும். கம்போஸ்ட் தயாரிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுவது மட்டுமல்ல. அதன் தன்மையைக் கவனித்து, அதற்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதும் ஆகும்” என்றார்.

பயோ கம்ப்ளீட்:

இரண்டு நாள் பயிற்சியில் மண் உயிரியல் அடிப்படைகள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மண்ணில் வாழும் உயிரினங்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 10 நாள் பயிற்சியில் ‘பயோகம்ப்ளீட்’ எனும் முழுமையான கம்போஸ்ட் தயாரிப்பது குறித்து செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்குத் தேவையான இயற்கை மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், கம்போஸ்ட் தயாரித்தல், அதன் ஈரப்பதம் மற்றும் காற்றோட்டத்தைப் பராமரித்தல், கம்போஸ்டின் தன்மையைக் கண்காணித்தல் மற்றும் கிளறிவிடுதல் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டன. மேலும், கம்போஸ்ட் எக்ஸ்ட்ராக்ட், கம்போஸ்ட் டீ போன்ற உர திரவக் கலவைகளைத் தயாரிப்பது மற்றும் அவற்றின் தரத்தை மதிப்பிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் ஒரு பகுதியாக, மண், கம்போஸ்ட் மற்றும் திரவக் கலவைகளின் மாதிரிகளை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்து, அவற்றில் உள்ள நுண்ணுயிரிகளை அடையாளம் காணவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இதில் மண் மாதிரிகளைச் சேகரித்தல் மற்றும் வயல்களில் மண்ணின் தன்மையை நேரடியாக ஆய்வு செய்தல் போன்ற பயிற்சிகளும் இடம்பெற்றன.

இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களைப் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதுடன், அந்தந்த பகுதிகளின் மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப மண் உயிரியல் சார்ந்த விவசாய முறைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்தும் கலந்துரையாடி 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

டாஸ்மாக் இனி தனியாருக்கு போகுதா? - காலி பாட்டில் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை
டாஸ்மாக் இனி தனியாருக்கு போகுதா? - காலி பாட்டில் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை
coimbatore power cut: கோவையில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! புதிய ரயில் கிராசிங் நிலையம் – தெற்கு ரயில்வே அதிரடி திட்டம்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! புதிய ரயில் கிராசிங் நிலையம் – தெற்கு ரயில்வே அதிரடி திட்டம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Embed widget