மேலும் அறிய

கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது; போலி நகைகளை வைத்து ஏமாற்றியது அம்பலம்

சுமார் 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டு மணிகள் திருடப்பட்டு இருப்பதும், அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.

கோவை வடவள்ளி பகுதியில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான உப கோவிலான அருள்மிகு கரி வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தற்காலிக தினக்கூலி அர்ச்சகராக ஸ்ரீவத்சாங்கன் (40) என்பவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த இவர், வடவள்ளி பகுதியில் தங்கியிருந்து பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23 ம் தேதியன்று இந்து சமய அறநிலை துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்தில் உள்ள நகைகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சுமார் 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டு மணிகள் திருடப்பட்டு இருப்பதும், அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையாளர் ஹர்ஷினி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நகைகளை திருடியதும், திருடப்பட்ட நகைகளை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்லரியில் வெற்றி பணத்தை வாங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தங்கம் ஜுவல்லரியின் உரிமையாளரை வரவழைத்து அந்த14 கிராம் தங்கத்திலாலான தாலி மற்றும் குண்டு மணிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் மீது கடந்த ஆண்டு புதுப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் எட்டு கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி திருடியதற்காக புழல் ஜெயிலில் 60 நாள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நகைகளை திருடிய வழக்கில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget