Premalatha Vijayakanth: ’மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்’ - பிரேமலதா விஜயகாந்த்
மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் எனக் கூறிவிட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் எனக் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியனின் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள பாலக்காடு செல்வதற்காக, சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” கலைஞர் நூலகம் வரவேற்கத்தக்க ஒன்று. அறிவு சார்ந்த விஷயம் என்பதால் மதுரை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் திறந்தால் சிறப்பாக இருக்கும்.மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் எனக் கூறிவிட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் எனக் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும்.
விஜயகாந்த் நலமுடன் உள்ளார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை சந்திப்பார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது தேர்தல் நேரங்களில் எல்லாம் சகஜமான ஒன்று தான். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் உரிய முறையில் அறிவிப்பார். எங்களின் உள்கட்சி தேர்தல் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எங்களது பல்வேறு மாவட்டங்களுக்கான சுற்றுப்பயணம் தொடங்கும். எனது மகன் 50 CENT குழுவுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் நவம்பர் 25ஆம் தேதி இசைக் கச்சேரியை நடத்த உள்ளார்” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்