மேலும் அறிய

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ; தனியார் பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை..

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி முதல்வர் உள்ளிட்டோரிடம் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ; தனியார் பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை..

இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து காவல் துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து நேற்றிரவு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ; தனியார் பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை..

இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி, உடலை மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காததுதான் தற்கொலைக்கு காரணமெனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புகாருக்கு உள்ளான ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பள்ளி முதல்வர் உள்ளிட்டோரிடம் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget