மேலும் அறிய

கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

முன்னாள் மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் 3 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது

கோவையில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இரண்டு பிரிவினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று அப்பள்ளியின் அருகே இரு பிரிவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் அப்பள்ளியில் படித்த 17 வயதான முன்னாள் மாணவரிடம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

அங்கு வந்த அந்த முன்னாள் மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் 3 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர்களை தாக்கிய முன்னாள் மாணவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

இதில் ஆலாந்துறையை சேரந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமார் தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் குத்தப்பட்டதால் மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு தனது சித்தப்பாவை கத்தியால் குத்தியதாக வழக்கு தொடரப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின் ஜாமீனில் வெளிவந்த அவர் தொடர்ந்து அடிக்கடி தகராறுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களை கத்தியால் சராமரியாக தாக்கியதில், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – அடுத்த மாதம் தொடங்கும் பணிகள்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – தொடங்கும் பணிகள்?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget