மேலும் அறிய

மலை ரயில் டிக்கெட் சர்ச்சை – ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்த ஊழியர்

மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு – தேர்தல் பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுக்கு மாற்றுத்திறனாளி ஊழியர் இரவு முழுவதும் காத்திருந்ததாக குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் பெறுவதற்காக, மாற்றுத்திறனாளி கிராம நிர்வாக உதவியாளரை இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் பணிகளின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த தேர்தல் பார்வையாளர்கள் உதகை செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்கள் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய விரும்பியிருந்த நிலையில், முன்பதிவு செய்யாததால் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இரண்டு கிராம நிர்வாக உதவியாளர்களை ரயில் நிலையத்திற்கு அனுப்பி டிக்கெட் பெற அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலை ரயிலுக்கான டிக்கெட்டுகள் மிகவும் குறைவாக வழங்கப்படுவதால், பயணிகள் முன்பே வந்து நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் பெறுவது வழக்கம். இந்த நிலையில், டிக்கெட் வாங்க அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதையும் பொருட்படுத்தாமல், நேற்று இரவு சுமார் 11 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொசு தொல்லையை தவிர்க்க கொசு மருந்து, போர்வை உள்ளிட்ட பொருட்களுடன் அவர்கள் ரயில் நிலையத்தில் தங்கி இருந்து, காலை வரை காத்திருந்து அதிகாரிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

Embed widget