மேலும் அறிய

வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் கைது ; அதிரடியாக கைது செய்த கோவை போலீசார்

V3 Online TV : விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என விஜயராகவன் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்திருந்தனர்.

V3 Online TV : வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என விஜயராகவன் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

இது தொடர்பாக மதுரையில் இருந்த வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் என்கிற குருஜியை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் இருந்த விஜயராகவனை காவல் துறையினர் கைது செய்த போது, நெஞ்சுவலி என தெரிவித்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விஜயராகவனை கைது செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வருகின்றனர்

கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம் மாதம் பணம் வழங்கி வருகிறது.

வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் கைது ; அதிரடியாக கைது செய்த கோவை போலீசார்

இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் விஜயராகவன்தான் எனவும், பினாமி பெயரில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் புகார் அளித்து இருந்தனர். இதனிடையே மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget