மேலும் அறிய

சோசியல் மீடியா பதிவுகள் கண்காணிப்பு: தேர்தல் விதிமீறினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்

ஆன்லைன் வாயிலாகவே தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கான அனுமதியை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் - கோவை ஆட்சியர்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார், நேற்று முதலே மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். 

சோசியல் மீடியா பதிவுகள் கண்காணிப்பு: தேர்தல் விதிமீறினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்

27,14, 676 மொத்த வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.  கோவையில் 3571 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளதாக கூறினார். ECINet மொபைல் செயலி மூலமும் வாக்காளர்கள் அவர்களது முழு விவரங்களை அறியலாம் எனவும் தெரிவித்தார். ஆன்லைன் வாயிலாகவே தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கான அனுமதியை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையமும் இதற்காக இயங்கப்படும் 1800250086 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார். 

மேலும் கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் webcasting வசதி ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். 8334 பேலட் யூனிட்கள் இருப்பதாகவும் 5700 control யூனிட் இருப்பதாகவும், 5572 VVM பேட் இருப்பதாக கூறினார். MCMC மூலமாகவும் மீடியாக்களில் வரும் செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாடல் போலிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

182 பதட்டமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்  அங்கு கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறினார். 50,000 ரூபாய் வரை ஆவணம் இன்றி பணத்தை எடுத்துச் செல்லலாம் அதை மீறி எடுத்துச் செல்லும் பட்சத்தில் ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லலாம் என தெரிவித்தார். 

MCMC என்று மீடியாக்களை கண்காணிக்கும் குழுவில் சோசியல் மீடியாக்களும் கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டார். மலைப்பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை கண்டறிந்து அங்குள்ளவர்கள் வாக்கு சாவடியை அடைவதற்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அதனை களைவதற்கான நடவடிக்கைகளும் வனத்துறையுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


சோசியல் மீடியா பதிவுகள் கண்காணிப்பு: தேர்தல் விதிமீறினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்

சோசியல் மீடியாக்களில் வாக்காளர்களை பாதிக்கும் பதிவுகள் வரும் பொழுது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். MCMC சர்டிபிகேஷன் இல்லாமல் எந்த ஒரு வேட்பாளர்களின் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தல் இருப்பதாகவும் அதனை மீறும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இது சோசியல் மீடியாக்களுக்கும் பொருந்தும் என்றார். சோசியல் மீடியா இன்ஃப்ளூரியன்சர்கள் தவறான பதிவுகளை போட்டாலோ model code of contact விதிமுறைகளை மீறி பதிவுகளை போட்டாலோ அது குற்றம் என்றும் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநகர காவல் துறை சார்பில் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து தகவல்கள் வரம் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget