மேலும் அறிய

’தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள் திறக்கப்படுமா?’ : அமைச்சர் முத்துசாமி விளக்கம்

கள்ளுக் கடை திறப்பது குறித்து பல்வேறு கோரிக்கைகள் வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துச்சாமி, ”கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2 கோடியே 49 லட்சம் மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்  இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தின் கீழ் 1048 பயனாளர்களுக்கு பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதன் மதிப்பு 5 கோடியே 11 லட்சம் என தெரிவித்தார். ”மக்களுடன் முதல்வர் திட்டத்தின் படி இன்றிலிருந்து 66 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் 218 கிராம பஞ்சாயத்துக்களில் இந்த முகாம்களில் நடத்தபட உள்ளதாகவும் 15 துறைகள் இதில் பங்கேற்கும் எனவும் 44 விதமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்கலாம் எனவும் 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கள்ளுக்கடைகள் திறக்கப்படுமா?

அவிநாசி மேம்பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும் என தெரிவித்தார். டெட்ரா பாட்டில் குறித்தான கேள்விக்கு, நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு இருப்பதாகவும், அதை எல்லாம் பார்த்த பின்பு தான் முடிவை கூற முடியும் என பதிலளித்தார்.

கள்ளுக் கடை திறப்பது குறித்து பல்வேறு கோரிக்கைகள் வருவது குறித்தான கேள்விக்கு, அது மிகப்பெரிய பாலிசியான முடிவு எனவும், அது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும், அதன் பிறகுதான் பதிலளிக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் கள்ளுக்கடை திறப்பது என்பது நீண்ட நாள் கோரிக்கை தானே என கேள்வி எழுப்பிய அவர், ஏன் இத்தனை நாட்களாக அதனை செய்யவில்லை என்று நானும் கேள்வி எழுப்பலாம்தானே தெரிவித்தார். இருக்கின்ற பிரச்சினைகளை ஆய்வு செய்த பிறகு அதன் பின்பு தான் முடிவுக்கு வர முடியும் என கூறினார்.

 கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது சரியானது அல்ல என தெரிவித்தார். மேலும் அரசு மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும், அதனை தொடர்ந்து செய்வதற்கு சில இடையூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிய அவர், வாட்ஸ் அப்யில் எதும் தகவல்கள் வந்தாலும் தங்களது சென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார்.

டாஸ்மாக்கில் பில்லிங்கில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து வருவதாகவும், இனிமேல் அந்த பில்லிங் சிஸ்டம் ஒழுங்காக நடைபெறும் என தெரிவித்தார். மேலும் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மனுவை விற்பனை செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். FL2 பார்களுக்கு அதிகமாக அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கமும் இல்லை என தெரிவித்த அவர், விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

மதுவை பயன்படுத்துபவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டி இருப்பதாகவும்,  நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், படிப்படியாகத்தான் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். கடையை மூடிவிட்டால் மட்டும் எதுவும் நடந்து விடாது எனவும், மது அருந்துபவர்களை அதற்கு தயார் செய்ய வேண்டும் என அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை பொதுமக்கள் திமுக பக்கமும் முதலமைச்சர் பக்கமும் முழுமையாக நிற்பதை நேரடியாக பார்க்க முடிவதாகவும் மாபெரும் வெற்றியை பொதுமக்கள் அளிப்பார்கள் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார்களோ அதே போன்று விக்கிரவாண்டிலும் கொடுப்பார்கள் என தெரிவித்தார். அதற்கு காரணம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முதலமைச்சர் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கை எனவும், விக்கிரவாண்டியில் மிகப்பெரிய ஆதரவை தங்களால் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – அடுத்த மாதம் தொடங்கும் பணிகள்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – தொடங்கும் பணிகள்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget