மேலும் அறிய

'அரிசிக்கு மத்திய அரசு மாறுபட்ட ஜி.எஸ்.டி வரி விதிக்கக்கூடாது’ - அமைச்சர் மூர்த்தி

"பேக் பண்ணிய அரிசிக்கு ஒரு வித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜி.எஸ்.டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம்"

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத்‌ திட்டம்‌ குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கக் கூட்டம்‌ நடைபெற்றது. வணிகவரித்துறை அமைச்சர்‌ பி.மூர்த்தி தலைமையில்‌ நடைபெற்ற இந்த நிகழ்வில், கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், அந்த மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி இந்த கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ”1999ம் ஆண்டு இந்த சமாதான திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். 5 முறை இது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50 ஆயிரம் வரை வரி நிலுவையில் இருக்கும் 95 ஆயிரம் பேருக்கு தள்ளுபடி செய்து, 1002 சொத்துகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி இருப்பதை சரி செய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர். மத்திய அரசு அவங்க என்ன சாப்பிடுறாங்க எனத் தெரியும். இருந்தாலும் அரிசிக்கான  கோரிக்கையினை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம். இது போன்று வணிக வரித்துறையில் தள்ளுபடி செய்து இருப்பது வரலாற்றில் கிடையாது. வணிகப் பெருமக்கள் 12 ஆண்டு காலம்  சலனப்பட்டு இருந்தார்கள். அவர்களுக்காகவே இந்த சமாதான திட்டம் கொண்டு வரப்பட்டது. 90 சதவீத வணிகர்கள் நியாயமாக இருந்தாலும், 10 சதவீதம் பேர் போலியாக இருந்து வணிகர்களின் பெயரை கெடுக்க இருக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் அதை திரும்ப பெற்று சமாதான திட்டத்திற்கு வந்துவிடலாம்.


அரிசிக்கு மத்திய அரசு மாறுபட்ட ஜி.எஸ்.டி வரி விதிக்கக்கூடாது’ - அமைச்சர் மூர்த்தி

மாவட்ட வாரியாக வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களை அழைத்து சமாதான திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி இருக்கின்றோம். இப்போது இருக்கும் நிலுவை வரியை கட்டினால்தான் இன்னும் இரு ஆண்டுகள் வரை இந்த சலுகையை நீடிக்க முதல்வரிடம் கேட்க முடியும். சமாதான திட்டம் குறித்து பேசும் போது, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதை கொண்டு வாருங்கள், தமிழக மக்களே உங்களை பாராட்டுவார்கள் என சொன்னார். சிறிய தவறுகள் இருந்தால் அபராதம் விதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமாதான திட்டத்தில் மிகப்பெரிய சலுகைகளை அரசு கொடுத்து இருக்கிறது. அனைத்து மண்டலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். வணிகர்கள் மத்தியில் இந்ததிட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விண்ணப்பிப்பதற்கு அரை மணி நேரம் போதும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கம் இருக்கின்றது. பேக் பண்ணிய அரிசிக்கு ஒரு வித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜி.எஸ்.டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம். கோதுமை, அரிசிக்கு பாகுபாடு காட்டுவதாக  சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut (21-07-2026): கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Embed widget