மேலும் அறிய

நள்ளிரவில் மயான கொள்ளை பூஜை – மாசாணியம்மன் வழிபாட்டில் பக்தர்கள் பரவசம்

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்வு. மகா சிவராத்திரியை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பாரம்பரிய பூஜை.

கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில், மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய மயான கொள்ளை நிகழ்வு இந்த ஆண்டும் நள்ளிரவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை காணவும், வழிபடவும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்வு

மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு, சொக்கம்புதூர் சுடுகாட்டில் மண்ணால் மாசாணியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, மலர்கள் மற்றும் அலங்காரங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்யிலிருந்து பம்பை, உடுக்கை உள்ளிட்ட பாரம்பரிய வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்த கோவில் பூசாரி, சுடுகாட்டில் மாசாணியம்மனைச் சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

பூஜையின் முக்கிய நிகழ்வாக, மாசாணியம்மன் சிலையின் இதயப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை பூசாரி தனது வாயால் கடித்தபடி எடுத்து, தீவிர ஆவேசத்துடன் நடனமாடினார். இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் பரவசத்தையும், ஆன்மிக உணர்வையும் ஏற்படுத்தியது. பூசாரியின் ஆக்ரோச நடனத்தைக் கண்டு, பக்தர்கள் “அரோகரா” முழக்கமிட்டு, மாசாணியம்மனையும் பூசாரியையும் வழிபட்டனர்.

 மண் எடுத்து வழிபாடு

நிகழ்வு நிறைவடைந்த பின்னர், மாசாணியம்மன் சிலையிலிருந்து மண் எடுத்து, அதனை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்டு வழிபட்டால், வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, நாளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் மற்றும் குண்டம் இறங்கும் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் ஆன்மிக உணர்வுகள் ஒன்றிணையும் இந்த மயான கொள்ளை நிகழ்வு, சொக்கம்புதூர் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் முக்கிய ஆன்மிக விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget