Watch Video: வால்பாறையில் தொடரும் கனமழை; மண் சரிவால் இடிந்து விழுந்த வீடுகள் - அதிர்ச்சி வீடியோ..!
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிக் கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி, பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே வெள்ளப் பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் மற்றும் கவியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிக் கூடங்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால், ஒரு வீடு இடிந்து விழும் காட்சி@abpnadu pic.twitter.com/BB6MzDPJ4h
">
இதனிடையே தொடர் மழை காரணமாக வால்பாறை சிறுவர் பூங்கா அருகே உள்ள கால்பந்து மைதானத்தின் அருகே கட்டப்பட்டிருந்த 30 அடி உயர தடுப்பு சுவர் மண் சரிவினால் இடிந்து விழுந்தன. இதற்கு மேல் பகுதியில் இருந்த மண் ஜோசப் மற்றும் சந்தா ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சாலையோர தடுப்பு சுவர்கள் இருந்து சேதமானது.
வால்பாறை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அரசு பேருந்துகளில் முழுவதுமாக மழை நீர் உள்ளே வருவதால் பயணிகள் அவருக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பேருந்துக்குள் குடை பிடித்த படியே பயணம் செய்கின்றனர். கனமழை நீடித்து வருவதால் வால்பாறை பகுதியில் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்