மேலும் அறிய

ஈரோடு : மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கருப்பன் - சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த கருப்பன் என்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தமிழ்நாட்டில் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 1455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகம் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் என 2 வனக்கோட்டங்களாக பிரித்து மொத்தம் 10 வனச்சரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஆசனூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, கேர்மாளம் வனச்சரகத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளீட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

வனம் மற்றும் மலை சார்ந்த தாளவாடி வட்டாரத்தில் விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனிடையே கடந்த ஒராண்டு காலமாக ‘கருப்பன்’ என பெயரிடப்பட்ட ஒரு காட்டு யானை அடிக்கடி கிராமப்பகுதிக்குள் நுழைந்து விளை பொருட்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 

ஈரோடு : மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கருப்பன் - சிக்கியது எப்படி?

இதனைத்தொடர்ந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த "கருப்பன்" என்ற யானை பிடிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் வனத்துறையினரால் துவங்கப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையை வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை. கருப்பன் என்ற காவல் தெய்வத்தின் பெயரை அந்த யானைக்கு வைத்ததால் தான், பிடிக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த காட்டு யானையை ஆறு முறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகள் தோல்வி அடைந்த நிலையில், அந்த யானைக்கு ’STR JTM 1’ ( சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி, தாளவாடி ஆண் யானை 1)  என்று  பெயர் மாற்றப்பட்டது. பின்னர் ஆப்ரேசன் ’STR JTM 1’ என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை  ஏழாவது முறையாக காட்டு யானையை பிடிக்கும் பணிகள் பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிகளுக்காக சின்னத்தம்பி, மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த யானையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஈரோடு : மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கருப்பன் - சிக்கியது எப்படி?

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மகராஜன்புரம் பகுதியில் உள்ள  விவசாய தோட்டத்திற்கு வந்தது. இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் ஓசூர் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட காட்டு யானையை கும்கி யானைகள் சின்னத்தம்பி, மாரியப்பன் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. கருப்பன் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவிக்க திட்டமிட்டுள்ளனர். ஒராண்டாக வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த கருப்பன் யானை பிடிபட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
நாகபந்தம்
நாகபந்தம்" திரைப்படத்தில் பார்வதி ஆக  நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது  
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Embed widget