'எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நான் அரசுப்பள்ளி மாணவன்' - சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பெருமிதம்
"சாதிப்பதற்கு எந்த பள்ளியில் இருந்து படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன் தான்” என்று சந்திரயான் திட்ட இயக்குனர் பெருமிதமாக கூறியுள்ளார்.
!['எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நான் அரசுப்பள்ளி மாணவன்' - சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பெருமிதம் Isro scientist Veeramuthuvel says that it is not important which school you study in to achieve 'எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நான் அரசுப்பள்ளி மாணவன்' - சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பெருமிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/f78342cd612db32635d8c4a3900dfed31698484837845188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன் சந்திராயன் - 3 குறித்து அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விளக்கமளித்து கலந்துரையாடினார்.
சந்திரயான் 3:
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வீரமுத்துவேல், "சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. சந்திராயன் லேன்ட் ஆன பின்பு புழுதி ஒரு அச்சுறுத்தலாக இல்லை. இதுவரை யாரும் போகாத இடங்களில் சந்திராயன் இறக்கப்பட்டது. நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்ட கால திட்டம். அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நிலவிற்கு மனிதர்கள் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
மாணவர்களுக்கு ஆர்வம்:
சந்திரயான் 3 தரையிரக்கம் என்பது மிகவும் மகிழ்வான ஒன்று. பிரதமர் நேரடியாக கலந்துரையாடிது மகிழ்ச்சி அளிக்கின்றது. இஸ்ரோவில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றது. படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது, நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சந்திராயன் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். விண்வெளி ஆராய்ச்சியில் பிற நாடுகளுக்கு இணையாக நம்முடைய செயல்பாடு இருக்கின்றது. சந்திராயன் தென்துருவத்தின் அருகில் தான் இறக்கப்பட்டுள்ளது. தென்துருவத்தில் இறக்கப்படவில்லை. இதில் மறைக்க எதுவுமில்லை. மாணவர்கள் மத்தியில் விண்வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவன்:
மாணவர்கள் எனக்கும் இஸ்ரோவில் பணியாற்றுபவர்களுக்கும் நிறைய கடிதம் எழுதி இருக்கின்றனர். மாணவர்கள் சந்திராயன் குறித்து ஆர்வமாக துல்லியமாக கடிதம் எழுதி இருப்பது என்பது சந்தோஷமாக இருக்கின்றது. சாதிப்பதற்கு எந்த பள்ளியில் இருந்து படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும். ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன் தான்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)