மேலும் அறிய

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு...!

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 31400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு–கேரள எல்லையான கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில், கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தது. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவையில், தற்போது கொரொனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மட்டுமே தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு...!

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதிகளவிலான நபர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 31,400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கேரள மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலாக உள்ள வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வழியாக வாகனங்களில் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர்.  


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு...!

ஏற்கனவே 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி ஊசி போட்டதற்கான சான்றிதழ், இ பதிவு போன்றவை  இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில், உரிய சான்றிதழ் உள்ள பயணிகளுக்கு மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. உரிய சான்றிதழ் இல்லாத நபர்கள் வரும் வாகனங்கள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பி விடப்படுகின்றனர். உரிய சான்றிதழ்கள் வைத்து கொண்டு வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாமல் அமர்ந்து வருபவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. உரிய சான்றிதழ்கள்  இல்லாமல் வரும் நபர்களின்  வாகனங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படுவதில்லை என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினர், சுகாதார துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து இந்தக் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று  கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்தின் வழியாக தமிழகம் வரும் 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ் இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Embed widget